என் மலர்
புதுக்கோட்டை
ஆலங்குடியில் கால்நடைக்கான சிறப்பு சுகாதார முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமில், கால்நடை உதவி மருத்துவர் செல்வவிநாயகி கலந்து கொண்டு 450 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தார்.
மேலும் கறவை பசு மாடுகளுக்கு தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கன்றுகளுக்கான பேரணி நடத்தி சிறந்த முறை யில் வளர்க்கப்பட்ட கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதே போல் சிறந்த முறையில் கறவை பசுக்களை வளர்த்து வரும் விவசாயி களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இம்முகாமில், கால்நடை ஆய்வாளர்கள் ஆனந்தன், சங்கீதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அரங்குளவன், மீனாட்சி, ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் குறுகலான சாலை பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கீழ இரண்டாம் வீதி போக்குவரத்து அதிகமாக நடைபெறும் பகுதியாக திகழ்ந்து வருகிறது.
மேலும் குறுகலான அந்த சாலையில் அடிக்கடி இடப்பற்றாக்குறையால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும் முக்கிய வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்த வீதியில் அதிகளவில் உணவங்கள், கடைகள் நிறைந்து காணப்படுகிறது.
அவற்றிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வீதிகளில் தங்களது வாகனங்களை முறையற்ற வகையில் நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அவசரம் என அத்தெருவில் போனால் மாட்டிக் கொண்டு முழி பிதுங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
அதேபோல் கீழ இரண்டாம் வீதியில் போக்குவரத்து போலீசார் தலையிட்டு வீதிகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகன போக்குவரத்தை ஒரு வழி பாதையாக மாற்றி அறிவித்துள்ளதை நடைமுறைபடுத்த காவலர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
பார்க்கிங் வசதி இல்லாத உணவங்கள் மற்றும் கடைகளை அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் நேரத்தில் அதிக அளவிலான வாக்குகள் பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 69.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி மாவட்டம் முழுவதும் மாலை 5 மணி வரை 68.77 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அடுத்த 1 மணி நேரத்தில் 0.84 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் போது சுமார் 2 ஆயிரம் பேர் வாக்களித்தது எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, சாதாரண வாக்காளர்கள் பலரும் டோக்கன் பெற்று அந்த அடிப்படையில் தங்களது வாக்கினை செலுத்தி இருப்பதாக தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சி 17 மற்றும் 18 வார்டுகளில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது பலருக்கு சந் தேகத்தை ஏற்படுத்தி இருக்கி றது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் வழங்காததால் பொது மக்கள் தாங்கள் எங்கு சென்று எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் தவித்தனர்.
இதனால் வாக்கு சதவீதம் குறைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் பல்வேறு மையங்களில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் ஒன்றில் வாக்களித்தால் அது ரஜினிக்காக மட்டுமே இருக்கும் என்று சபதமேற்று வாழ்ந்த ரசிகர் ஒருவர் தனது மனதை மாற்றி நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்துள்ளார். இதற்காக அவர் 30 ஆண்டுகள் காத்திருந்துள்ளார்.
புதுக்கோட்டை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வாக்குறுதியை அவர் அளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறினார். தேர்தல் ஒன்றில் வாக்களித்தால் அது ரஜினிக்காக மட்டுமே இருக்கும் என்று சபதமேற்று வாழ்ந்த ரசிகர் ஒருவர் தனது மனதை மாற்றி நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்துள்ளார். இதற்காக அவர் 30 ஆண்டுகள் காத்திருந்துள்ளார்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). சிறு வயதில் இருந்தே இவர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர். பள்ளியில் படிக்கும் காலம் முதலே ரஜினி மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டிருந்தார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவது என விடாப்பிடியாக இருந்து வந்தார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் வாக்கை செலுத்தவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிவித்தார். இதனால் மகேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நடிகர் ரஜினியின் கட்சிக்கு தனது முதல் வாக்கை செலுத்த அவர் காத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தது மகேந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து தனது முதல் வாக்கை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அளித்துள்ளார் மகேந்திரன். புதுக்கோட்டை நகராட்சி 22-வது வார்டில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்திருந்த நான், அவர் ஆட்சிக்கு வந்ததும் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் தனது எண்ணத்தைத் தெளிவாகக் கூறியதால், கடைசியாக எனது வாக்குரிமையைப் பயன்படுத்த நினைத்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறப்பாகச் செயல்படுவதை உணர்ந்தேன்.

ரஜினி என்ன செய்வார் என நான் எதிர்பார்த்ததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். எங்கள் எம்.பி., எம்.எம். அப்துல்லாவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார்.
இதையும் படியுங்கள்... இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுக்கோட்டை நகராட்சி 18வார்டு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக, மற்ற வாக்காளர்களிடம் சிறிதுநேரம் லெட்ஜரில் கையெழுத்து வாங்குவதற்கு பதில் கைரேகை மட்டுமே பெற்றனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி 18வார்டு பகுதியில், கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்த புகாரையடுத்து திமுக அதிமுகவினர் இடையே வக்குச்சாவடி அறைக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
18வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் அரசு ஊழியர்கள் 3 பேர் ஓட்டு போட வந்தனர். அங்கு வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், வாக்குச்சாவடி அறைக்குள் திமுக- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, மற்ற வாக்காளர்களிடம் லெட்ஜரில் கையெழுத்து வாங்காமல் கைரேகை மட்டுமே பெற்றனர்.
பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாக்குச்சாவடிக்குள் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போலீசார் வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
ஆலங்குடியில் மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் திருட்டுத் தனமாக மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலங்குடி வம்பன் பாப்பம் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி வயது 60 மற்றும் மேலக்கரும்பிரான்கோட்டை சேர்ந்த சுபாஷ் 27 ஆகியோர் மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் பழனிசாமி மற்றும் சுபாஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிமிருந்து 27 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.14,790 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆலங்குடி குளமங்கலம் அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடைபெற்று வந்த திருவிழா மாசிமக தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெற்றது.
விழாவை முன்னிட்டு கோவில் அருகில் உள்ள குளத்தில் தெப்பம் தயாரிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உற்சவரை தெப்பத்தில் எழுந்தருள செய்தனர்.
பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பம் கோவில் சன்னதிக்கு முன் புறத்திலிருந்து குளத்தின் நான்கு கரைகளையும் சுற்றி வந்தது. இரவு சுமார் 9 மணிக்கு சுற்ற ஆரம்பித்தது காலை 5.00 மணி அளவில் தெப்பம் நிலைக்கு வந்தது.
தெப்பத்திருவிழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
வாக்கு பதிவு மையத்திற்கு பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்கின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.27 வார்டுகளிலும் 34 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 573 பேரும், பெண் வாக்காளர்கள் 18 ஆயிரத்து 65 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேரும் உள்ளனர்.
நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான லீமாசைமன் தலைமையில் கடந்த 4-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் 145 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 128 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து அந்தந்த கட்சி வேட்பாளர்கள், பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறக்கும் பிரச்சாரம் கடந்த 17-ந் தேதி மாலை 6 மணியோடு ஓய்வுக்கு வந்தது.
இந்நிலையில் அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கும் 39 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நாளான இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 39 வாக்குச்சாவடி மையங்களில் பதட்டமான வாக்குச்சாவடி ஏதும் இல்லை. ஆகையால் மக்கள் அமைதியான முறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்கின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க வாக்கு மையங்களை நோக்கி மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத் தில் புதுக்கோட்டை நகராட் சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க. தே.மு.தி.க. மக்கள் நீதி மய்யம், பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர்.
இதே போல அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 128 பேர் களத்தில் உள்ளனர், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கறம்பக்குடி, கீரனூர், பொன்னமராவதி ஆகிய 6 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில்கவுன் சிலர் பதவிக்கும் இலுப்பூர், கீரமங்கலம் ஆகிய பேரூராட்சியில் தலா 14 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் மொத்தம் 492 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக 278 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமாக வாக்குச்சாவடி மையங்களில் குவியத்தொடங்கினர். அனைத்து மையங்களிலும் வாக்காளர்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மொத்தம் 67 என கணக்கிடப்பட்டு, இவற்றில் வெப் கேமரா பொருத்தி வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண் டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள், 140 சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்பட 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலங்குடி குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவிழா நடை பெறுவது வழக்கம். அது போல் இவ்வாண்டும் மாசி திருவிழா 2 தினங்களாக நடை பெற்று வருகிறது.
குளமங்கலம் அய்யனார் கோவில் முன்பு ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 32 அடி உயரமுள்ள குதிரை சிலை உள்ளது. குதிரை சிலைக்கு முன்பு உள்ள காலத்தில் மலர் மாலைகள் பிறகு பிளாஸ்டிக் மாலைகள் அணிவிக்கப்பட்டு வந்தன. பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி சில காலங்களாக காகிதப் பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பலமாவடங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆட்டோக்கள், கார்களில் காகிதப் பூ மாலைகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை முதல் சாரை சரையாக அய்யனார் கோவிலுக்கு வந்து குதிரை சிலைக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அய்யனாருக்கு பால், பன்னீர் தயிர்விபூதி போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றன. அதனைதொடர்ந்து அய்யனாருக்கு சந்த னகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது.
திருவிழாவை காண கீரமங்கலம், மேற்பனைக் காடு, கொத்தமங்கலம், பனங்குளம், அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டாரமாவட் டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். மேலும் இன்று தெப்பத் திருவிழா நடை பெற உள்ளது.
பாதுகாப்பு பணிகளை கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் ஆலங்குடி வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் கவனித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயிர் உற்பத்தி இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கு வித்தல் போன்ற நோக்கங்களோடு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்குவதோடு விதைப்பு பொய்த்தாலும், நடவுசெய்ய இயலாத நிலை ஏற்பட்டாலும், அறுவடைக்குப் பிந்திய இழப்பு ஏற்பட்டாலும் பயன்பெற வழி உள்ளது.
மேலும் பகுதி சார்ந்த இயற்கை இடர்பாடுகளான புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை, வயல்களில் வெள்ள நீர் தேக்கம் மற்றும் அடை பருவகால இடர்பாடுகளால் இழப்புகள் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களை போல, தோட்டக்கலை பயிர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி, ஆகியவற்றிற்கு வருவாய் கிராம அளவில் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காப்பீடு செய்ய வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2525 வரையிலும், மரவள்ளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1020 வரையிலும் மட்டுமே செலுத்தினால் போதும் மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய மாநில அரசுகளே ஏற்கின்றன. காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 28 ஆம் தேதி ஆகும்.
விவசாயிகள் நடப்பு ராபி பருவத்தில் பயிர் செய்த வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அதற்குரிய பிரிமியத் தொகை, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கடன் மற்றும் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி விரைந்து காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
கறம்பக்குடியில் மணல் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேலவாண்டான் விடுதி நியாயவிலைக்கடைஅருகில் சட்ட விரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் ஏற்றிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது உரிய அனுமதி யின்றி டிராக்டரில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மணல் கடத்தலில் ஈடுப்பட்டஅம்புக் கோவில் இடையன் கொல்லை பகுதியை சேர்ந்த ராஜேஷ், தினேஷ், பாக்கிய ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.