என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்.
மணல் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
கறம்பக்குடியில் மணல் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேலவாண்டான் விடுதி நியாயவிலைக்கடைஅருகில் சட்ட விரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் ஏற்றிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது உரிய அனுமதி யின்றி டிராக்டரில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மணல் கடத்தலில் ஈடுப்பட்டஅம்புக் கோவில் இடையன் கொல்லை பகுதியை சேர்ந்த ராஜேஷ், தினேஷ், பாக்கிய ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story






