என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.
புதுக்கோட்டையில் போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டையில் குறுகலான சாலை பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கீழ இரண்டாம் வீதி போக்குவரத்து அதிகமாக நடைபெறும் பகுதியாக திகழ்ந்து வருகிறது.
மேலும் குறுகலான அந்த சாலையில் அடிக்கடி இடப்பற்றாக்குறையால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும் முக்கிய வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்த வீதியில் அதிகளவில் உணவங்கள், கடைகள் நிறைந்து காணப்படுகிறது.
அவற்றிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வீதிகளில் தங்களது வாகனங்களை முறையற்ற வகையில் நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அவசரம் என அத்தெருவில் போனால் மாட்டிக் கொண்டு முழி பிதுங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
அதேபோல் கீழ இரண்டாம் வீதியில் போக்குவரத்து போலீசார் தலையிட்டு வீதிகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகன போக்குவரத்தை ஒரு வழி பாதையாக மாற்றி அறிவித்துள்ளதை நடைமுறைபடுத்த காவலர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
பார்க்கிங் வசதி இல்லாத உணவங்கள் மற்றும் கடைகளை அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






