என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை நகராட்சி 15-வது வார்டு வடக்கு 3-ம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள டி.இ.எல்.சி.நடுநிலைப்பள்ளி வாக்குமைய
    X
    புதுக்கோட்டை நகராட்சி 15-வது வார்டு வடக்கு 3-ம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள டி.இ.எல்.சி.நடுநிலைப்பள்ளி வாக்குமைய

    வாக்களிக்க வாக்கு மையங்களை நோக்கி ஆர்வமுடன் வரும் மக்கள்

    தேர்தலில் வாக்களிக்க வாக்கு மையங்களை நோக்கி மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத் தில் புதுக்கோட்டை நகராட் சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க. தே.மு.தி.க. மக்கள் நீதி மய்யம், பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர். 

    இதே போல அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 128 பேர் களத்தில் உள்ளனர், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கறம்பக்குடி, கீரனூர், பொன்னமராவதி ஆகிய 6 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில்கவுன் சிலர் பதவிக்கும் இலுப்பூர், கீரமங்கலம் ஆகிய பேரூராட்சியில் தலா 14 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் மொத்தம் 492 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக 278 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமாக வாக்குச்சாவடி மையங்களில் குவியத்தொடங்கினர். அனைத்து மையங்களிலும் வாக்காளர்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மொத்தம் 67 என கணக்கிடப்பட்டு, இவற்றில் வெப் கேமரா பொருத்தி வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
     
    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    தேர்தலில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண் டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள், 140 சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்பட 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×