என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த 1 வயது குழந்தை நெல் அறுவடை எந்திரம் மோதி பலியானது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர்   சத்தியசீலன்  மகள் யாஷிகா (வயது 1). 

    இந்த குழந்தை இன்று வீட்டின் அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது. அவரது தாய் மற்றும் உறவினர்கள் வீட்டில் வேலையில் கவனம் செலுத்தி இருந்தனர். 

    அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவர் நெல் அறுவடை எந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக சாலையில் விளையாடிக் கொண்டிருந்த யாஷிகா மீது நெல் அறுவடை எந்திரம் மோதியது. 

    இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரும்பாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

    பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை யாஷிகா பரிதாபமாக உயிரிழந்தது. 

    இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலியாயினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா அழகிரிபாளையம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்  ஆனந்தராஜ் (வயது23). இவரது நண்பர் பெரம்பலூர் திருநகரை சேர்ந்த குணசீலன் (22).  இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று வேப்பந்தட்டைக்கு சென்று விட்டு இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பினர்.

    பெரம்பலூர் மாவட்டம் எசனை அருகே சென்ற போது எதிரே ஜெனரேட்டர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்தராஜ், குணசீலன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து  தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று   இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து லாரி  டிரைவர் சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள ராயபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே பிலிமிசை கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை  கிராமத்தில் சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை உதவி இயக்குனர்  டாக்டர் மும்மூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, சினைப் பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

    முகாமில் கன்றுகள் பேரணி நடைபெற்று சிறந்த கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு  பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக கால்நடைகளை வளர்த்து அதிக பால் உற்பத்தி செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.   

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள்  செல்வகுமார், சேகர்,  ராஜேஷ் கண்ணா, இளையராஜா, ராஜேஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள்,  கால்நடை பராமரிப்பு  உதவியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.
    விவசாயிகளுக்கு பெரம்பலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் சம்பா பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. 

    சன்ன ரக நெல்லிற்க்கு கிலோ 20 ரூபாய் 60 பைசாவாகவும் மோட்டா ரக நெல்லிற்கு 20 ரூபாய் 15 பைசாவாகவும் விலை நிர்ணயம் செய்துள்ளனர். 

    இதன்படி விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து பயன் பெறலாம் என  நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

    நிகழ்ச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் சாந்தமூர்த்தி மற்றும் விவசாயிகள் பலர்  கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் கடை எரிந்து நாசமானது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் எம்.வி.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 38).இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2வது தளத்தில்  சூப்பர் பஜார் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

    முதல் தளத்தில் அலங்காரப் பொருட்களும், 2வது தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும் விளையாட்டு பொம்மைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடையை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இரவு 10 மணியளவில் 2ம் தள கட்டிடத்தின் வலது பக்கத்தில் உள்ள ஜன்னல் வழியாக தீ பிடித்து எரிவதை பார்த்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் தீ அணைக்கப்பட்டது.

    எரிந்து சேதமடைந்த பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ 2 லட்சம் ஆகும்.  மேலும் இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    தீ பிடித்ததற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடும்பதகராறில் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்து விசாரணை.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் கிராமம், அம்பேத்கார் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்  இவரது மனைவி முத்துலட்சுமி (வயது45). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், அதனால்  கணவன்& மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என கூறப்படுகிறது.  

    நேற்று வீட்டில் முத்துலட்சுமி சமையலுக்காக கோழி இறைச்சியை வெட்டி கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், இறைச்சி வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்துலட்சுமி துடி துடித்து உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி  அலுவலகத்தில்  அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகளை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அலுவலர்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணைய விதி முறைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியின் போதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதுகுறித்து அவர் கூறியததாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் நான்கு பேரூராட்சி ஆகியவைகளுக்கு வரும் 19 ந்தேதி அன்று தேர்தல் நடை பெறுகிறது. தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன் படுத்தப்பட உள்ளது. 

    வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.   வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் பொறியாளர்கள் கண்காணிப்பில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு காப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். 

    எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் மற்றும் காப்பு அறையில் பாது காப்புடன் வைக்கும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பு நடை பெறுகிறது. இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வருகை தந்து அவசியம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
    சுயேச்சைக்கு 4 தேர்தல்களிலும் குலுக்கல் முறையில் ஒரே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் ரமேஷ் பாண்டியன் என்பவர் 4-வதுமுறையாக சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

    இவர் பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த போது 2001-ல் ஒருமுறையும், நகராட்சியாக உருவானதில் இருந்து 2006, 2011 என 2 முறையும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 

    சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் இவருக்கு 4 முறையும் குலுக்கல் முறையில் தண்ணீர் குழாய் சின்னம் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, எனது வார்டு மக்களுக்கு எனது பெயரும், நான் போட்டியிடும் தண்ணீர் குழாய் சின்னமும் மனதில் பதிந்துள்ளது. இந்த முறை வழக்கம் போல் அந்த சின்னத்தை கேட்டு பலர் போட்டிபோட்டனர். 
    ஆனால், குலுக்கல் முறையில் எனக்கு இந்த முறையும் தண்ணீர் குழாய் சின்னம் கிடைத்துள்ளது. இதனால் நான் வெற்றி பெறுவேன் என்றார்.
    பெரம்பலூர் அருகே தனி ஒரு பெண்ணாக காதலித்தவனை கரம் பிடிக்க காதலர் தினத்தன்று தனியாக வந்து போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 25). இவரது வீட்டுக்கு நேற்றிரவு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், ஏரநாடு அருகே உள்ள எலையூர் கிராமத்தை சேர்ந்த ஹரிப்பிரியா (25) என்பவர் வந்தார்.

    அவர், முத்துக்குமார் தன்னை திருமணம் செய்துக் கொள்ளக் கோரி திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    இதில், முத்துக்குமாரும், ஹரிப்பிரியாவும், கிர்கிஸ் தான் நாட்டில் ஒன்றாக எம்.பி.பிஎஸ். படித்து உள்ளனர். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்து காதலித்து வந்துள்ளனர். பின்னர் இந்தியா திரும்பிய பின்னர் இருவரும் ஒன்றாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில், ஒரே வீட்டில் தங்கிக்கொண்டு அங்குள்ள சஞ்சீவன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

    இதற்கிடையே தங்கள் வீட்டில் காதலை எதிர்க்கிறார்கள் காரணம் காட்டி, முத்துக்குமார், ஹரிப்பிரியாவை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    அதனால், கேரளாவில் இருந்து நேராக காதலன் முத்துக்குமார் வீட்டிற்கு வந்த காதலி டாக்டர் ஹரிப்ரியா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. முத்துக்குமாரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து அரும்பாவூர் போலீசார், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் ஹரிபிரியாவிற்கு உரிய பாதுகாப்பை அளித்து வருகின்றனர். மேலும், தனி ஒரு பெண்ணாக காதலித்தவனை கரம் பிடிக்க காதலர் தினத்தன்று தனியாக வந்து போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

    இதையொட்டி பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 110 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் குரும்பலூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய ‘பேலட் சீட்’ பொருத்தும் பணி அந்தந்த வார்டு வேட்பாளர்களின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

    இதில் குரும்பலூர் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 15 வாக்குப்பதிவு எந்திரங்களிலும், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 17 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னமும் பொருத்தப்பட்டு தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

    இதனை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கட பிரியா, வட்டார தேர்தல் பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி பூலாம்பாடி, அரும்பாவூர் ஆகிய பேரூராட்சிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நாளையும் இந்த பணியானது பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நாளையும் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

    வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 169 தென்னங்கன்றுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட் டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களைக் கவர்ந்திட பரிசுப்பொருட்கள் வழங்குதல் போன்ற முறைகேடுகளைத் தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று நகராட்சியின் 10-வது வார்டில் வாக்காளர்களை கவர்வதற்காக அந்த வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் தனது தென்னை மர சின்னத்தை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் விதமான வாக்காளர்களின் வீட்டுக்கு ஒரு தென்னை மரக்கன்றினை வழங்க 

    2 சிறிய ரக சரக்கு வாகனங்களில் ஒன்றில் 107, மற்றொன்றில் 62 என மொத்தம் 169 தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து வீடு வீடாக விநியோகிக்க முற்பட்டுள்ளார்.
     
    அப்போது தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த ஆலத்தூர் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையனினர் துறை மங்கலம் 10-வது வார்டு பள்ளிவாசல் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் வாக்காளர் வீடுகளுக்கு வழங்க இருந்த ரூ.42,250 மதிப்பிலான 169 தென்னை மரக்கன்றுகளை பறிமுதல் செய்து பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.
    பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 183 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் துரைராஜ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு லப்பைக்குடிகாட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது பெண்ணகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் அதிகாரிகளைக் கண்டதும் தாங்கள் எடுத்துச் சென்ற 39 மதுப்பாட்டில்களை போட்டு விட்டு தப்பித்துச் சென்று விட்டனர். அந்த மதுபாட்டில்களை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

    இதே போல பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தனி வட்டாட்சியர் பொன்னுதுரை தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியே மேலப்புலியூரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 21) என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
    ×