என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சுயேச்சைக்கு 4 தேர்தல்களிலும் குலுக்கல் முறையில் ஒரே சின்னம்
சுயேச்சைக்கு 4 தேர்தல்களிலும் குலுக்கல் முறையில் ஒரே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் ரமேஷ் பாண்டியன் என்பவர் 4-வதுமுறையாக சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த போது 2001-ல் ஒருமுறையும், நகராட்சியாக உருவானதில் இருந்து 2006, 2011 என 2 முறையும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் இவருக்கு 4 முறையும் குலுக்கல் முறையில் தண்ணீர் குழாய் சின்னம் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, எனது வார்டு மக்களுக்கு எனது பெயரும், நான் போட்டியிடும் தண்ணீர் குழாய் சின்னமும் மனதில் பதிந்துள்ளது. இந்த முறை வழக்கம் போல் அந்த சின்னத்தை கேட்டு பலர் போட்டிபோட்டனர்.
ஆனால், குலுக்கல் முறையில் எனக்கு இந்த முறையும் தண்ணீர் குழாய் சின்னம் கிடைத்துள்ளது. இதனால் நான் வெற்றி பெறுவேன் என்றார்.
Next Story






