என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலனை கரம் பிடிக்க தர்ணா போராட்டம் நடத்திய டாக்டர்
காதலர் தினத்தில் பரபரப்பு - காதலனை கரம் பிடிக்க தர்ணா போராட்டம் நடத்திய டாக்டர்
பெரம்பலூர் அருகே தனி ஒரு பெண்ணாக காதலித்தவனை கரம் பிடிக்க காதலர் தினத்தன்று தனியாக வந்து போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 25). இவரது வீட்டுக்கு நேற்றிரவு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், ஏரநாடு அருகே உள்ள எலையூர் கிராமத்தை சேர்ந்த ஹரிப்பிரியா (25) என்பவர் வந்தார்.
அவர், முத்துக்குமார் தன்னை திருமணம் செய்துக் கொள்ளக் கோரி திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
இதில், முத்துக்குமாரும், ஹரிப்பிரியாவும், கிர்கிஸ் தான் நாட்டில் ஒன்றாக எம்.பி.பிஎஸ். படித்து உள்ளனர். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்து காதலித்து வந்துள்ளனர். பின்னர் இந்தியா திரும்பிய பின்னர் இருவரும் ஒன்றாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில், ஒரே வீட்டில் தங்கிக்கொண்டு அங்குள்ள சஞ்சீவன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே தங்கள் வீட்டில் காதலை எதிர்க்கிறார்கள் காரணம் காட்டி, முத்துக்குமார், ஹரிப்பிரியாவை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதனால், கேரளாவில் இருந்து நேராக காதலன் முத்துக்குமார் வீட்டிற்கு வந்த காதலி டாக்டர் ஹரிப்ரியா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. முத்துக்குமாரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரும்பாவூர் போலீசார், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் ஹரிபிரியாவிற்கு உரிய பாதுகாப்பை அளித்து வருகின்றனர். மேலும், தனி ஒரு பெண்ணாக காதலித்தவனை கரம் பிடிக்க காதலர் தினத்தன்று தனியாக வந்து போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






