என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
பெரம்பலூரில் கால்நடை சிகிச்சை முகாம்
பெரம்பலூர் அருகே பிலிமிசை கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தில் சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் மும்மூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, சினைப் பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
முகாமில் கன்றுகள் பேரணி நடைபெற்று சிறந்த கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக கால்நடைகளை வளர்த்து அதிக பால் உற்பத்தி செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வகுமார், சேகர், ராஜேஷ் கண்ணா, இளையராஜா, ராஜேஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.
Next Story






