என் மலர்
பெரம்பலூர்
சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் போக்சோவில் கைது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சத்தியமூர்த்தி (வயது 19).
இவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, கைப்பேசி எண் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சத்தியமூர்த்தியை கண்டித்து அனுப்பியுள்ளனார்.
இருப்பினும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் சிறுமியின் பெற்றோர் கை.களத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

குடி நீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி கிராம ஊராட்சிக்குள்பட்ட வேப்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால், அப்பகுதி மக்கள் ஆழ்குழாய் கிணறுகளிலும், வயல்வெளி பகுதிகளுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் குன்னம் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குன்னம் போலீசார், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர் . மறியலால் வேப்பூர் குன்னம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் ஸ்ரீநேத்திர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில், சமயபுரம் யானை புனித நீரூற்றி, அருள் மிகு ஸ்ரீநேத்திர விநாய கர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய் வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு இந்திரா நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீநேத்திரவிநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாணம் நடந்தது.
விழாவில், சமயபுரம் யானை பங்கேற்று, பிரம்மபுரீஸ்வர் ஆலயத்திலிருந்து புன்னிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்து ஸ்ரீநேத்திரவிநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிகளுக்கு ஊற்றி மஹா கும்பா பிஷேகம் செய்து வைத்தது.
இதற்காக, பூசாரி பிரபாகரன் புனித நீரை சுமந்து, யானையின் மீது அமர்ந்து ஊர்வலமாக வந்தார். இதைத்தொடர்ந்து, அரசு- வேம்புக்கு திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக, கொல்லி மலை அம்மையார் சித்தர் பீடம் முதல் தலைமை பீடாதி பதி சிவராஜசேகர சிவனடியார் தலைமையில், வாஸ்து வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆணைந்து வழிபாடு, குருவழிபாடு,
சங்கல்ப வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மையப்பன் வழிபாடு ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது விழாவில், பம்பை மங்கல வாத்தியங்கள், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், கருப்புசாமி ஆகிய சுவாமி வேடமணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூரில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் டி.இ.எல்.சி ஆலய கிறிஸ்தவ இளைஞர் இயக்கம் சார்பில் கோடைக்கால தண்ணீர்பந்தல் திறப்பு விழா ஆலயவளாகத்தின் முன்பு நடைபெற்றது.
விழாவில் தேவாலய பாதிரியார்கள் சார்பில் பவுல், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தலைமை வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி தண்ணீர் பந்தலை தொடங்கி வைத்தார்.
விழாவில் தேவாலய பங்கு தாரர்கள், தேவஊழியர்கள், மற்றும் இந்தோ டிரஸ்ட் செல்வகுமார், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ பிரபாகரன் ஆறுதல் கூறி நிவாரண நிதி உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே மேலப்புலியூர் கிராமத்தில் செல்வக்குமார், புகழேந்தி ஆகிய இருவர்களது வீடுகளிலும் மின் கசிவு ஏற்பட்டு கூரை வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ. பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி
நிவாரண நிதியாக தலா ரூ.20ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி,சேலை, பாய், போர்வை உள்ளிட்ட நிவராண பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே பேரளி பகுதியில் நாளை 4ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
பெரம்பலூர்-:
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை 4ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி,
குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் நாளை 4ம்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை பெரம்பலூர் மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

வெங்காய விலை வீச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை பகுதிகளில் விவசாயிகள் ஆண்டுக்கு இரு பருவம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். நடப்பு ஆண்டில் வெங்காய சாகுபடி பரப்பளவு 5 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு எதிர்பார்த்த விளைச்சலை பெற்றனர். ஆனால் எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. மார்கெட்டில் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்யும் வெங்காயத்தை காய வைத்து மூட்டைகளில் கட்டி அடுக்கி வைத்து வருகிறார்கள்.
அடைக்கம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பெரியசாமி கூறும்போது, நான் 4 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தேன். ஒரு ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் செலவழித்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 50 மூட்டை சின்னவெங்காயம் அறுவடை செய்தேன்.
ஆனால் உள்ளூர் வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்துக்கு ரூ. 10 விலை நிர்ணயம் செய்கிறார்கள். கடந்த ஆண்டு வெங்காயம் அழுகி நஷ்டம் ஏற்பட்டது. இப்போது நல்ல விளைச்சலை பெற்றிருக்கிறோம். ஆனால் விலையை கேட்டால் மயக்கம் வருகிறது. விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வெங்காயத்துக்கு ஆதார விலை கேட்டு மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அறுவடை செய்த வெங்காயத்தை தோட்டத்தில் பாதுகாத்து வருகிறேன். தற்போது 150 மூட்டை வெங்காயம் தோட்டத்தில் இருக்கிறது. மார்கெட் நிலவரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே கடன் தவணையை எப்படி? கட்டுவது என தெரியவில்லை என்றார்.
நாட்டார் மங்கலத்தை நேரு என்ற விவசாயி கூறும்போது, ஆலத்தூர் வட்டாரத்தில் நிறைய விவசாயிகள் வெங்காயத்தை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர். நான் 7 ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டு 12 டன் அறுவடை செய்தேன். இதில் 4 டன் மட்டுமே விற்பனை செய்துள்ளேன். மீதம் உள்ள வெங்காயம் தோட்டத்தில் இருக்கிறது என்றார்.
திருச்சியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, மைசூர் மற்றும் பல்லடம் வெங்காய வரத்து அதிகமாக இருக்கிறது. ரூ. 15க்கு விவசாயிகள் வெங்காயத்தை விற்பனை செய்கிறார்கள். அதனால் இப்போதைக்கு விலை ஏற வாய்ப்பு இல்லை என்றார்.

பெரம்பலூரில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் :
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு மாவட்ட பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கோவில் உண்டில், வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி இருக்கிறது.
நேற்றைய தினம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிடநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் பா.ம.க.வை பிரமுகரும், ராங்கியம் பகுதி ஒன்றிய கவுன்சிலருமான புகழேந்தி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் ரூ. 4 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்றனர்.
இதற்கிடையே கருக்கை கிராமத்தில் தனியாக வசித்து வரும் சந்திரா என்ற மூதாட்டி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அவரின் 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் 37 பவுன் நகைகள், ரூ.55 ஆயிரம் பணத்தை அள்ளிச் சென்றனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
இந்த பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரத்தில் போலீசாரின் ரோந்து மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.இதை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களும் திருடப்பட்டு வருகிறது. சாலையில் செல்பவர்களை மடக்கி வழி பறி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தொடர்ந்து நடைபெறும் இந்த கொள்ளை சம்பவங்களால் ஒரு வித அச்சத்திலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்று புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பெரம்பலூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது
பெரம்பலூர் மாவட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
2010-ம் ஆண்டிற்கு பிறகு புதிதாக உருவான குடிசை வாழ் குடும்பங்கள் கணக்கெடுப்பு பணி 4ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடைபெற உள்ளது.
28.2.22ம் நாளில் ஊராட்சி வீட்டு வரி கேட்பு பதிவேட்டின்படி உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பின் பணியின் போது தங்களது ஆதார் எண், வீட்டு வரி, வீடு எண் மற்றும் மின் இணைப்பு எண் ஆகியவற்றை
கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்பு குழுவிடம் வழங்கி தங்களது பெயரினை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மணிமேகலை விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்-:
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் வரும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள்
மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை மாற்றம், நிதிவரவு செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்பணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம்,
கிராம சபை பங்கேற்பு, மாற்றுதிறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும்
நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 5ம் தேதிவரை அளிக்கலாம்.
அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாது.மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சி நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் உணவு, மெட்டீரியல்ஸ் பொருட்கள், நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் உலகம், நகரும் பொருட்கள், ஹவ் திங்க்ஸ் வொர்க், இயற்கை பெனாமினா, இயற்கை வளங்கள் உள்ளிட்ட 7 தலைப்புகளில் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தும் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கையில் அறிவியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் விஞ்ஞானம் எல்லா இடத்திலும் கலந்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும் அறிவியலைப் பற்றி ஆசிரியர் பெருமக்களுடன் கலந்துரையாடி அந்த வேலைகளை தனித்தனியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
மேலும் உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அந்த உதவியை மாவட்ட நிர்வாகம் செய்வதற்கு தயாராக உள்ளது. உங்களுடைய ஆசிரியர் பெருமக்களும் அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவார்கள்.
படிக்கும் மாணவ மாணவிகள் நன்றாக படித்து நல்ல பெயரினை வாங்கிக் கொடுத்து உங்களது வாழ்க்கையில் நல்லமுறையில் முன்னேறவும், அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டிரைவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூரில் நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டிரைவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்தது.
கருத்தரற்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகவேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெற்றிவேலன், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் முதல்வர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் கலந்துக் கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து போக்குவரத்துதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி விபத்தில்லா பயணம் எனும் லட்சியத்தை அடைய பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் வழிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விவரித்தார்.
இதில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிலையத்தில் பணிபுரியும் 200 டிரைவர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.