என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி

    பெரம்பலூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது

    பெரம்பலூர் மாவட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    2010-ம் ஆண்டிற்கு பிறகு புதிதாக உருவான குடிசை வாழ் குடும்பங்கள் கணக்கெடுப்பு பணி 4ந்தேதி  முதல் 25ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    28.2.22ம் நாளில் ஊராட்சி வீட்டு வரி கேட்பு பதிவேட்டின்படி உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பின் பணியின் போது தங்களது ஆதார் எண், வீட்டு வரி, வீடு எண் மற்றும் மின் இணைப்பு எண் ஆகியவற்றை

    கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்பு குழுவிடம் வழங்கி தங்களது பெயரினை பதிவு செய்துகொள்ளலாம்.

    மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×