என் மலர்
பெரம்பலூர்
தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சியில் பெருவெற்றியை தந்த பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான ராஜேந்தின் தலைமை வகித்தார்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ.வும், நகர செயலாளருமான பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாநில சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் கலந்து கொண்டு பேசுகையில், வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார் .
மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். முதல்மைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுய மரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.
மக்களின் தேவைகளை அறிந்து நல்ல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது எனவும், முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், சிவக்குமார், மாவட்ட அவைதலைவர் அ.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர்,
மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், சோமுமதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

பெரம்பலூர் கோர்ட்டில் 17வது ஆண்டு சமரச விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 17வது ஆண்டு சமரச விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் தலைமை வகித்து பேசுகையில், சமரச மையம் என்பது சரிசெய்யும் மையமாகும். இந்த மையம் ஏப்ரல் 2005-ல் துவங்கப்பட்டு, 17-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
சமரசம் என்பது ஒரு ஞானம் ஆகும். சமரசம் செய்யும்போது இருவரும் மனம் பொருந்தி விட்டுக்கொடுத்து தீர்வு காணப்படும். சமரச தீர்வு மையத்தில் காணப்படும் தீர்வுகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
வழக்குத் தரப்பினர்கள், தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்துகொள்ள ஏதுவாய் கோர்ட் இங்கு வழக்குகளை அனுப்புகிறது. இங்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்கு தரப்பினர்கள், சுமூகமான வழக்கை முடித்துக் கொள்ள உதவுவார்கள்.
இந்த சேவைக்கு வழக்குத் தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முலியவை சமரச மையத்தில் உள்ளன.
இரு தரப்பினர்கள் தங்கள் உள்மனம் திறந்து தங்களுடைய கோபதாபங்களை தெரிவித்து எதிர்தரப்பின் நிலையை அறியவும் ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு வேறு வழி தேடாமல் கோர்ட் அணுக ஒரு தூண்டுகோலாகவும் அமையும்.
சமரச மையத்தில் முதலில் சமரசத்தைப் பற்றி தெளிவாகவும், வழக்கை முடித்துக்கொள்வதில் உள்ள நன்மைகளையும் எடுத்துக் கூறுவார்கள். இருதரப்பினர்களுக்கும் உடனடி பொருளாதார நன்மை கிடைத்திடவும், செலவு, நேரம் சிரமங்களை குறைத்திடவும், மனஉளைச்சலிலிருந்து விடுதலை பெறவும், நடைமுறைக்கு ஏற்ற, இணைந்து செயல்படுகிற பலவிதமான தீர்வுகளையும் பெற முடியும்.
எனவே வழக்கு தரப்பினரும், எதிர்தரப்பினரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால், கோர்ட் கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க கோர்ட் உத்தரவிடும் என தெரிவித்தார்.

அரசு கல்லூரியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரி முதல்வர் சிவனேசன் தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் சேகர், தனியார் நிறுவன இயக்குனர் விமல்வர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 180 மாணவிகள் தேர்வு பெற்றனர். இவர்கள் சென்னையிலுள்ள பிரபல தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறை தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். முடிவில் கணினிஅறிவியியல் துறைத் தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.
வாகன விபத்தில் மேலும் 2 பேர் பலியானார்கள்
பெரம்பலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) ரைஸ்மில் ஊழியர். இவரது மனைவி வேதவள்ளி (40) இவர்களது மகன்கள் கிஷோர் (12) திவாகர் (6) கள்ளக்குறிச்சி தீர்த்தாலு நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (45) ஐ.டி.ஊழியர். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வந்தவர் வீட்டிலி ருந்தே வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3&ந்தேதி கண்ணன், இவரது மனைவி வேதவள்ளி, கதிரவன், இவரது தாய் தமிழரசி (65) தம்பி கார்முகில் (40) கதிரவனின் மகன் சந்திரவதனன் (12) கார்முகில் மகன் லிங்கநேத்திரன் (8) உள்பட 9 பேர் காரில் ஸ்ரீரங் கம் மற்றும் சமயபுரம் கோயி லில் சாமி கும்பிட வந்தனர். பின்னர் மதியம் 2 மணியள வில் ஊர்திரும்பினர். காரை கதிரவன் ஓட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் இடதுபுறம் ஓவர் டேக் செய்ததால் கதிரவன் காரை வலதுபுறம் திருப்ப முற்பட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மலையப்ப நகர் பிரிவு பாதையில் தேசிய நெடுஞ்சாலையில் வலதுபுற சாலைக்கு சென்றது.
அப்போது எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கண்ணன், கார்முகில், மற்றும் லிங்கநேத்திரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தமிழரசி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த வேதவள்ளி, கதிரவன் ஆகியோர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், கிஷோர், சந்திரவதனன் ஆகியோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கிஷோரும், நேற்று காலை சந்திரவதனனும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந் துள்ளது.
காதலனுடன் திருமணம் செய்து வைக்க கோரி ஆட்சியரகத்தில் இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
பெரம்பலூர்:
காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி, புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி மாநிலம், முத்தியால் பேட்டை, மணிக்கூண்டு எதிரேயுள்ள ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த துரை மகள் சித்ரா (வயது 26). பிளஸ் 2 படித்துள்ள இவர், தனியார் திருமண தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்திருந்தாராம்.
இதைப் பார்த்த பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கமல் (வயது 27) என்பவர், சித்ராவின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறினாராம். தொடர்ந்து, இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனராம்.
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி சித்ராவின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்ட கமல், வீட்டிலுள்ளவர்கள் அவரை பார்க்க விரும்புவதாகக் கூறி, தனது ஊருக்கு வருமாறு சித்ராவிடம் தெரிவித்தாராம். இதை நம்பி, கமல் வீட்டுக்குச் சென்ற சித்ராவுடன் அவர் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தனது ஊருக்குச் சென்ற சித்ரா மீண்டும் கமலை கைப்பேசியில் தொடர்புகொண்டபோது திருமணம் செய்துகொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற சித்ரா, தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி மனு அளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆட்சியரகத்தில் சித்ரா மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மீட்கப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.ஏ. ஆங்கிலம் மற்றும், பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு மாணவிகளும், மாலை நீணட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது, லாடபுரத்தில் உள்ள மாணவன் ஒருவரிடம் கொடுத்து விட்டு அவரது செல்போனை வாங்கி சென்றிருப்பதது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள் எனவும், தற்பொழுது பெரம்பலூர் கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 5 ஆம் தேதி காலை கல்லூரி பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக சென்ற மாணவிகள், கல்லூரிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
அதில் ஒரு பெண்ணுக்கு, பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் ஆண்கள் போல் இருப்பதும், கையில் காப்பு போடுவதும் பூ, பொட்டு வைக்காமலும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது
செல்போனை ஆராய்ந்ததில் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது காணாமல் போன மாணவிகள் இருவரும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
காணாமல் போன மாணவிகள் ஆண்களாக மாறுவதற்காக சென்னை வந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மாலை ஒரு மாணவி ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் சென்னையிலிருந்து 2 மாணவிகளையும் மீட்டு இன்று பெரம்பலூரில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பால் காதல் ஏற்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து வரும் மே மாதம் 31&ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பபடிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம்.
அல்லது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்பஅட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம்,
மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில் மேற்படி சான்று களுடன் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகை புரிந்து விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். தற்போது உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செங்குணத்தில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணத்தில் நீடித்த நிலையான வளர்ச்சியுடைய நீர்வழிப்பகுதி மேலாண்மை மற்றும் நில வள மேம்பாட்டில் இளைஞர்களின் பங்குஎன்ற தலைப்பில் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா நடந்தது.
7 நாள் நடந்த முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி, செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப் படுத்தினர்.
கோவில் வளாகத்தில் உழவாரப் பணிகள், பொது இடங்கள் சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், தெருவிளக்கு பழுது நீக்குதல், விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட பல களப்பணிகளை மேற் கொண்டனர்.
இதை தொடர்ந்து நடந்த முகாமின் நிறைவு விழாவிற்கு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக் குழு தலைவர் கலியபெருமாள் கலந்து கொண்டு முகாமில் பணிபுரிந்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரேம்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, லயன்ஸ் கிளப் தலைவர் முரளிதரன், பொருளாளர் தமிழ்மாறன், செங்குணம் அரசு உயர் நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சிவானந்தம், சமூக ஆர்வலர் குமார் அய்யாவு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
குடிநீர் குழாய் இணைப்புக்காக பொதுமக்கள் 2 ஆண்டாக காத்திருக்கின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மங்களம் கிராமத்தில் புதிய ஒட் டத்தெரு அமைந்துள்ளது. இங்கு 100&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மேல்நிலைநீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டத்தெருவில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது வீடுகளுக்கு முன்பு இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
சாலை அமைக்கும் போது பணிகள் முடிந்ததும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வில்லை.
இதனால் அப்பகுதி தெரு வாசிகள் சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிணறு களுக்கு சென்று குடங்களில் குடிநீர் பிடிக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.
இதுபற்றி ஒட்டத்தெருவை சேர்ந்த கலை என்ற பெண் மணி கூறும்போது, இந்த குடிநீர் பிரச்சினைக்காக பஞ்சாயத்து அலுவலகம், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.
தினமும் 5, 6 குடம் தண் ணீர் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தேவைப்படுகிறது. இதனால் பக்கத்து ஊர்க ளுக்கு சென்று குடிநீருக்கு பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம் என்றார். பஞ்சாயத்து நிர்காவம் தரப்பில், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. விரைவில் குழாய்கள் பதிக்கப்படும் என்றனர்.

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் :
தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட மாணவர் அணிச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலா ளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவபிரகாசம், கிருஷ்ணசாமி , செல்வமணி, சசிகுமார்,
ரவிச்சந்திரன், ரமேஷ், குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வ ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்பெருமாள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பாக மாணவிகளுக்கான இணையவழி குற்றங்கள் குறித்து சைபர் க்ரைம் டெக்னாலஜி விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடை பெற்றது.
கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தடய அறிவியல் துறை மாணவி இந்து கோபால் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலந்து கொண்டு பேசுகையில்,
இணையத்தின்வழியாக நடக்கும் குற்றங்களில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது பற்றியும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் எடுத்துக்கூறினார்.
தொழில்நுட்பபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவமீனா பேசுகையில் இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்களின் வகைகளை மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார்.
சப்&-இன்ஸ்பெக்டர் மனோஜ் பேசுகையில், இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்களை பற்றி எடுத்துக்காட்டுகளுடன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 500 மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தடய அறிவியல் துறை மாணவி அபர்ணா நன்றி கூறினார்.
தடையின்றி மின் வினியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யவேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 15 துணை மின் நிலையங்களிலிருந்து மாவட்டம் முழுவதும் மின்சாரம் சரியான அழுத்தத்தில் விநியோகம் செய்யப்படுவதில்லை. அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இதனால் விவசாய பம்ப் செட் மூலம் தண்ணீர் பாய்ச்ச இயலாமல், போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்து தெளிவாக தெரியாமல் விவசாயிகள் விளை நிலங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
எனவே சரியான அழுத்தத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யவும், மின்சாரம் விநியோகம் செய்யும் நேரம் குறித்து தெளிவாக விவசாயிகளுக்கு முன் அறிவிப்பு செய்யவும் வேண்டும் என அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக் கொண்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தடையின்றி மின்விநியாகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.