என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குடிநீர் குழாய் இணைப்புக்காக 2 ஆண்டாக காத்திருக்கும் பொதுமக்கள்
குடிநீர் குழாய் இணைப்புக்காக பொதுமக்கள் 2 ஆண்டாக காத்திருக்கின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மங்களம் கிராமத்தில் புதிய ஒட் டத்தெரு அமைந்துள்ளது. இங்கு 100&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மேல்நிலைநீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டத்தெருவில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது வீடுகளுக்கு முன்பு இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
சாலை அமைக்கும் போது பணிகள் முடிந்ததும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வில்லை.
இதனால் அப்பகுதி தெரு வாசிகள் சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிணறு களுக்கு சென்று குடங்களில் குடிநீர் பிடிக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.
இதுபற்றி ஒட்டத்தெருவை சேர்ந்த கலை என்ற பெண் மணி கூறும்போது, இந்த குடிநீர் பிரச்சினைக்காக பஞ்சாயத்து அலுவலகம், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.
தினமும் 5, 6 குடம் தண் ணீர் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தேவைப்படுகிறது. இதனால் பக்கத்து ஊர்க ளுக்கு சென்று குடிநீருக்கு பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம் என்றார். பஞ்சாயத்து நிர்காவம் தரப்பில், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. விரைவில் குழாய்கள் பதிக்கப்படும் என்றனர்.

Next Story