என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவரது வீட்டில் குளித்துக் கொண்டு உள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் வயது 33 என்பவர் பள்ளி மாணவி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அவருடைய செல்போனுக்கு அனுப்பி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இல்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர்:
தமிழ் புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்,
செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில், பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில்,
வெங்கனூர் விருத்தாசலஸ்வரர் கோவில், எஸ். ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் சுவாமிகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் மணிகண்டன் (வயது 32) லாரி ஓட்டுனராக இவர், 15 வயதுடைய உறவுக்கார சிறுமியை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21&ந் தேதி திருமணம் செய்து கொண்டாராம்.
தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இது குறித்து தகவலறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் லதா, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இதன் பேரில் மணிகண்டன், அவரது தந்தை பிச்சை, தாய் ஜானகி, சிறுமியின் தந்தை கலியமூர்த்தி, தாய் அம்சவள்ளி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் மணிகண்டனை கைது செய்த போலீசார் , பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பெரம்பலூர் :
தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தின் முன்பு நீத்தார் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயனைப்பு வீரர்கள் மலரஞ்சலி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நீத்தார் நினைவு நாளையொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தீத்தொண்டு வாரம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. வரும் 20-ந் தேதி வரை இது கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட உள்ளனர்.
ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூர் கிராமத்துக்குள்பட்ட மங்களமேடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நெகிழி கலந்த தார்ச் சாலைகள் ரூ. 13.08 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும்,
ரஞ்சன்குடி- ஆற்காடு செல்லும் தார்ச் சாலை ரூ.10.39 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும், எறையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளையும், வேப்பூர் ஒன்றியம்,
வயலப்பாடி கிராமத்தில் வீடு கட்டுமானப் பணிகள் மற்றும் கால்நடை கொட்டகை, ஓலைப்பாடி கிராமத்தில் தையல் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கூறியதாவது,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையுடன், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் நெகிழிகள் சேமிக்கப்படுகின்றன.
காரையில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி சேமிப்புக் கிடங்கில் சாலை அமைக்க உகந்த நெகிழிகள் தரம் பிரிக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தி வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

பூலாம்பாடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடம்பூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, அரும்பாவூர், ஆ.மேட்டூர், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நீண்ட தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக மழை காலங்களில் நெல்லை பாதுகாத்து வைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இதனால் பல மூட்டை நெல் வீணாக போன நிலையும் ஏற்பட்டது. எனவே தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பூலாம்பாடி பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்றை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி பூலாம்பாடி கிராமத்தில் சுமார் 1 1/2 ஏக்கர் பரப்பளவிலான நிலம் சீரமைக்கப்பட்டு நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றது.
இதையடுத்து பூலாம்பாடியில் இன்று தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
விழாவில் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரிய பிரகாசம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை 14 ந்தேதி மதுபான விற்பனை கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை 14 ந்தேதி வியாழக்கிழமை அன்று அனைத்து வகையான மதுபான விற்பனைக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும்
எப்எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை 14ந் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.
மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் செயல்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் நகராட்சி கூட்டுமன்றத்தில் அவசர நகர் மன்ற கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் குமரிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதுமே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தனமணி, லெட்சுமி, பழனிசாமி ஆகியோர் சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையில் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறவேண்டும் என கோஷமிட்டவாறு, சொத்து வரி உயர்வை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கழிவு நீரினை சுத்தம் செய்யும் பொருட்டு ரூ. 37 லட்சம் செலவில் புதிய சிஸ்டம் நடைமுறைப்படுத்துதல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாசு கட்டுப்பாடு நிலையம் தனியாக நிறுவ வேண்டும்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நெடுவாசலில் உள்ள நீர்நிலைகளில் திறந்து விடுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும் அங்கு குப்பைகளை தரம் பிரிக்காமல் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
மாவட்டத்தில் கல்குவாரி ஏலம் முடிந்து்ம சில குவாரிகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக அளவு ஆழம் தோண்டப்படுகிறது. அனுமதிக்கப்பட்டஅளவை விட குவாரியில் அதிக அளவு வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
அனுமதியின்றி சுண்ணாம்பு கல் தோண்டி எடுக்கப்பட்டு தனியார் நிறுவனம் எடுத்து செல்கிறார்கள். இதனை அய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும், என்றனர். மேலும் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்டபிரியாவை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் குரும்பலூரில் நடந்தது.
குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். டாக்டர்கள் புவனேஸ்வரி, ஜெய்சந்திரன், அம்சவேணி ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் கொண்ட குழுவினர்
பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மனிதவள மேம்பட்டு துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாமில் சென்னையை சார்ந்த டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், எஸ்.பி.எல். உட்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் மதுரையை சார்ந்த சத்யம் பயோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், எஸ்.பி.எல். உட்கட்டமைப்பு நிறுவனம், சத்யம் பயோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
முகாமில் பயோ மெடிக்கல், மெக்கானிக்கல், சிவில் எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேளாண்மை துறையை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நேர்முகத்தேர்வில் சுமார் 200&க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டு சம்பளமாக நான்கு முதல் ஐந்து லட்சம் வரை வழங்கப்படும் என மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் சுமார் என்பது சதவீத மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணையைப் பெற்று தங்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்து கொண்டனர்.
எஞ்சிய மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை தொடரவும், தொழில் முனைவோராகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துணை முதல்வர், மற்றும் துறைத்தலைவர்கள் அனைவரும் பாராட்டினார்.

கிணற்றில் விழுந்து தத்தளித்தவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எறைய சமுத்திரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (வயது 48). இவர் தனது வயலில் உள்ள சுமார் 50 அடி ஆழ கொண்ட கிணற்றில் இறங்கி நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்துவிட்டு மேலே ஏறும்போது
தவறி விழுந்து அடிபட்டு ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றுக்குள் இறங்கி ரமேசை மீட்டனர்.