என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

    சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் மணிகண்டன் (வயது 32) லாரி ஓட்டுனராக இவர், 15 வயதுடைய உறவுக்கார சிறுமியை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் 21&ந் தேதி திருமணம் செய்து கொண்டாராம். 

    தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டாராம். 

    இது குறித்து தகவலறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் லதா, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இதன் பேரில் மணிகண்டன், அவரது தந்தை பிச்சை, தாய் ஜானகி, சிறுமியின் தந்தை கலியமூர்த்தி, தாய் அம்சவள்ளி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதற்கிடையில் மணிகண்டனை கைது செய்த போலீசார் , பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×