என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரக
    X
    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரக

    பூலாம்பாடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    பூலாம்பாடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
    பெரம்பலூர்:


    பெரம்பலூர் மாவட்டத்தில் கடம்பூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, அரும்பாவூர், ஆ.மேட்டூர், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நீண்ட தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது.

    குறிப்பாக மழை காலங்களில் நெல்லை பாதுகாத்து வைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இதனால் பல மூட்டை நெல் வீணாக போன நிலையும் ஏற்பட்டது. எனவே தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பூலாம்பாடி பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்றை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி பூலாம்பாடி கிராமத்தில் சுமார் 1 1/2 ஏக்கர் பரப்பளவிலான நிலம் சீரமைக்கப்பட்டு நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றது.

    இதையடுத்து பூலாம்பாடியில் இன்று தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

    விழாவில் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரிய பிரகாசம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.


    Next Story
    ×