என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சார்பு நீதிபதி தெரிவித்தார்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்-பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்தான சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்-புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசுகையில், அச்சம் என்பது குற்றங்களுக்கான முதன்மை காரணமாக உள்ளது. எனவே அச்சம் தவிர்த்து பள்ளி குழந்தைகள் தன்னம்-பிக்கை கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

    குற்றங்கள் நடக்கும் போது குற்றத்தினை தடுத்திடும் மன வலிமையை வளர்ப்பதோடு, குற்றத்திற்கு எதிராக அவற்றினை சட்ட வழியில் தடுத்திடும் வழிகளையும் கற்றறிந்திருக்க வேண்டும். ஆண் பெண் பாகுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாக அதற்கான முயற்சிகள் குடும்பங்-களிலுருந்து தொடங்--கப்பட வேண்டும்.

    மாணவர்கள் மதிப்-பெண்கள் பெறுவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் சமூகத்தில் ஏற்படும் வன்-கொடு-மைகளை களைவதற்கு உண்டான தலைமை பண்-பிற்கான ஆளுமையினை வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்போன் போன்ற கருவிகளை பயன்-படுத்தும் போது அதற்கு அடிமையாகாமல் அறவழியினை கற்று வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கிடும் மன உறுதியினை மாணவர்-கள் கொள்ள-வேண்டும். 

    கல்வி-யோடு விளை-யாட்டிலும் மாணவர்கள் குழுவாக இணையும் போது அவர்-களுக்குள் சமநிலையான எண்ணங்கள் உருவாகும் என தெரிவித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சட்டம் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், அரசின் நலத்-திட்டங்கள் குறித்தும் பேசினார். 

    குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டு மருதமுத்து, ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர்கள் கீதா, ஷீபா, பாலரி-யாஷினி ஆகியோர் பெண் குழந்தைகள் பாது-காப்பு குறித்து பேசினர். இதில் பள்ளி மாணவ-,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து-கொண்டனர். முன்னதாக பள்ளி தலை-மையாசிரியர்  கஜபதி வரவேற்றார். முடிவில் உதவி தலைமை-யாசிரியர் ரவிச்-சந்திரன் நன்றி கூறி-னார்.
    குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வர குன்னம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை பொது மக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் பயன் படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை இருபுறமும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் 108 வாகனங்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பொழுது வாகனங்களை உரசி உள்ளே அமர்ந்திருக்கும் நோயாளிகள் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் உள்ளது.

    மேலும்  குன்னத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்கள் அதிக அளிவில் செக்கப் செய்ய வருகின்றனர். அப்படி அவர்கள் இந்த சாலைகளில் வரும்பொழுது கரடு முரடான பாதைகளில் வர வேண்டிய நிலை உள்ளது.  

    இதனால் மிகவும் சோர்வடைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைகின்றனர். குன்னம் காவல் நிலையத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை உள்ள சாலைகள் மிகவும் கரடுமுரடாக வாகனங்கள் செல்ல தகுதியற்ற முறையில் இருந்து வருகிறது.

    எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்துதர வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சார்பில் செங்குணம் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பெண் குழந்தைகள் பாது-காப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாண்டியன் தலைமை வகித்தார். ஏட்டு மருதமுத்து, போலீஸ் சுமா, ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர் கீதா மற்றும் அவரது குழு-வினர்-கள் மாணவி-களுக்கு பெண்கள் மற்றும் குழந்-தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்-புணர்வு ஏற்படுத்தியும், 

    போலீஸ்-ஸ்டேசனில்  செயல்-படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்-பேசி எண் 181, குழந்தை-களுக்கு எதிரான குற்றச்-சாட்டுக்-களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண், பள்ளி குழந்தைகளின் பாது-காப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 எண்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதில் பள்ளி மாணவிகள், ஆசிரியையகள் கலந்து கொண்டனர்.
    தீத்தொண்டு வர இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தீயணைப்-புத்துறை சார்பில் தீத்தொண்டு வாரத்தை-யொட்டி இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணி மற்றும் விழிப்-புணர்வு நிகழ்ச்சி ஆகியன நடந்தது.

    நீத்தார் நினைவு நாளை-யொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14&ந்தேதி முதல் இன்று வரை கடை-பிடிக்கப் படுகிறது. இந்த நாட்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படை-வீரர்கள் ஈடுபட்டு வரு-கின்றனர்.

    இதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் முன்பு நடந்த இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட தீய-னைப்பு அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று தீயணைப்பு படை வீரர்கள் நகரில் முக்கிய பகுதிகள் வழியாக சென்று விழிப்-புணர்வை ஏற்படுத்தினர். 

    மேலும் பொது-மக்களிடம் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிலைய அலுவலர் உதய-குமார் மற்றும் தீயனைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தடகளம் மற்றும் குழு-விளையாட்டு போட்டிகள் நடந்தது. 

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு  கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட குற்றப்-பிரிவு டிஎஸ்பி தங்கவேல் கலந்து கொண்டு விளை-யாட்டுப் போட்டி-களில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். 

    விழாவில் மேலாண்-மையியல் துறைத்-தலைவரும், விளையாட்டு குழு ஒருங்-கிணைப்-பாளருமான சிபு வர-வேற்றார். முடிவில் இயற்பியல் துறை விரிவு-ரையாளர் குமணன் நன்றி கூறினார்.
    கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தொடங்கியது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வுக்கான நேர்காணல் பெரம்-பலூர் புது-பஸ்ஸ்டாண்ட் எதிர் புறம் உள்ள கால்நடை மருந்த வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மண்டல  இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. 

    இந்த நேர்காணல் 22&ந்தேதி வரை நடை-பெறுகிறது. இப்பணிக்கு விண்ணப்பித்-தோருக்கு நேர்-காணலுக்கான அழைப்-பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தங்கள் விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள தகுதி-களுக்கான அனைத்து மூலச்-சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை அசலுடன் நேர்-காணலில் கலந்துகொள்ள அறிவிக்கப்-பட்டிருந்தது.


    இதன்படி காலையில் அதிகளவிலான பேர் நேர்காணலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்றிந்தனர். மண்டல இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோர் தலைமையில், துணை இயக்குநர் குணசேகர், உதவி இயக்குநர் மும்மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் 

    சான்றிதழ் சரிபார்ப்பு, கால்நடை கையாளும் திறன் அறிதல், சைக்கிள் ஓட்டும் திறன் அறிதல் மற்றும் நேர்காணலை நடத்தினர். நேர்காணல் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் நல அலுவலர் ரமண-கோபால் நேர்காணல் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

    இதில் 400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பட்டிருந்தது. இதில் நேற்று 267 பேர் நேர்காணலில் கலந்து-கொண்டனர்.
    வேப்பூர் அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    குன்னம் அடுத்துள்ள வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது.முகாமை கல்லூரி முதல்வர் மீனா தொடங்கி வைத்தார். 

    முகாமில் இளங்கலை மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவிகள் 303 பேர் கலந்து கொண்டனர்.   

    முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐ&போன், ஆர்எஸ்எம்பிஎல், பிஒய்டி உள்ளிட்ட மூன்று செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டன.   

    சான்றிதழை மாணவிகளுக்கு செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் பவானி மற்றும் கல்லூரி முதல்வர் மீனா ஆகியோர் வழங்கினர்.  முகாம் ஏற்பாடுகளை முனைவர் மணிகண்டன்  செய்து இருந்தார்.
    வேளாண்மை அறிவியல் கல்வி பாடப்பிரிவை பொது கல்வியாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வேளாண்மை அறிவியல் கல்வி பாடப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அச்சங்க மாநில தலைவர் அக்ரி.மாதவன், செயலாளர் பகுத்தறிவு, பொருளாளர் ராமன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

    தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் வேண்டுகோள் ஏற்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்-கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத குறைவான இடங்களுக்கு பதிலாக இந்த

    கல்வி ஆண்டு முதல் அரசு கல்லூரிகளில் கூடுதலாக இடங்கள் 98 இடங்கள் வழங்கியமைக்கும், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைவு பெற்ற தனியார் கல்லூரி-களிலும் இந்த ஆண்டு முதல் 5 சதவீத இடஒதுக்கீடு செய்து 100 இடங்கள் வழங்கி-யமைக்கும்,

    இட ஒதுக்கீட்டிற்காக வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட பழங்குடியின மாணவர் சந்திரனுக்கு வேளாண்மைக் கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்கி உத்தர-விட்டமைக்கும், கால்-நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பிரிவு

    மாணவர்-களுக்கு வழங்கப்படும் 5 சதவீத இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக 7.5 சதவீத இட-ஒதுக்கீடு வழங்கியமைக்கும், வேளாண் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், பணி விதிகள் உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர், வேளாண்மை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள்,

    வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், ஆணையர், இணை இயக்குநர் ஆகியோருக்கு சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    குறிப்பிட்ட மேல்-நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 ம்-வகுப்புகளில் தொழிற்-கல்வி பாடபிரிவில் உள்ள வேளாண்மை அறிவியல் கல்வி பாடபிரிவினை பொது கல்வியாக மாற்றி அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 6 ம் வகுப்பு முதல் 12ம்-வகுப்பு வரை நடை முறைப்படுத்த வேண்டும்,

    சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதியின் அடிப்படையில் வேளாண்மை முதுநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.   
    பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் குத்துவிளக்கேற்றிவைத்து தொடங்கிவைத்தார்.  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பின் தலைமை நிலைய அதிகாரி செல்வகுமார், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கோவிந்தசாமி ஆகியோர் பேசினார்.

    வேலைவாய்ப்பு முகாமில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் சிறப்பு பாடப் பிரிவுகளான யோகா, ஹிந்தி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரிய மாணவ,மாணவிகள் என ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளின் மனித வள மேம்பாட்டு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான 500 ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்து பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

    முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பிரேமலதா வரவேற்றார். முடிவில் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாந்தி நன்றி கூறினார்.

    சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இலவச இ-சேவை மையமாக அமைச்சர் மாற்றியுள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கார், தனது குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் நலன் கருதி இலவச இ-சேவை மையமாக ஞாயிற்றுக்கிழமை மாற்றினர்.

    குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினார் அலுவலகம் குன்னத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில், அத்தொகுதி உறுப்பினரான அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கணினி, பிரிண்டர், இணையதள வசதி ஆகியவற்றை அமைத்து பொதுமக்கள் நலன்கருதி இலவச இ- சேவை மையமாக மாற்றியுள்ளர்.

    இம் மையத்தை, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. ராஜேந்திரன் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

    இந்த இ- சேவை மையம் மூலம் எவ்வித கட்டணமின்றி பொதுமக்கள் இணையதளம் வழியாக பிறப்பு, இறப்பு, வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறலாம்.

    ஆதார் திருத்தம், மின் கட்டணம், பல்வேறு வரிகள் செலுத்துதல், போக்குவரத்து அபராதக் கட்டணம் செலுத்துதல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவைகளை இலவசமாக பெற வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே கோடைகால தண்ணீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரி, இளநீர், பப்பாளி ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

    தொடர்ந்து, வேப்பூர் ஒன்றியம், மூங்கில்பாடி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ. 46.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு, மோட்டார் அறை மற்றும் குழாய் அமைத்து கிராம பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையிலான திட்டத்தையும் அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.
    4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருடப்பட்டுள்ளது
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வடக்குமாதவி சாலையிலுள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

    பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபம் அருகேயுள்ள வணிக வளாகத்தில், சாமியப்பா நகரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் செல்வம் (வயது 39) காய்கனி கடையும், லோகநாதன் மனைவி விஜயலட்சுமி (32) ரியல் எஸ்டேட் அலுவலகமும், மீரா மொய்தீன் மகன் சமீர் (22) மளிகைக் கடையும் நடத்தி வருகின்றனர். மேலும், அதே வணிக வளாகத்தில் நியாயவிலைக் கடையும் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட கடைகளை இரவு பூட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில், காலை ரேசன் கடை உள்பட 4 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளின்  உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது,

    ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டிருந்தது. எஞ்சிய கடைகளில் பணம், இதரப் பொருள்கள் இல்லாததால் திருட முயற்சித்திருப்பதும் கண்டறியப்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகையை மாம நபர் பறித்து சென்றார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வைத்தீஸ்வரி வயது 26. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

    பெரியசாமி கோரிபாளையம் ரிங் ரோட்டில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரி அவரது வீட்டில் தனியாக இருந்த போது யாரோ மர்ம நபர் கதவை தட்டி உள்ளனர்.  

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் தான் வந்து விட்டதாக எண்ணி கதவை திறந்து எட்டி பார்த்துள்ளார்.

    அப்போது முகத்தில் துணியால் மூடிய மர்மநபர் ஒருவர் வைத்தீஸ்வரி மீது மிளகாய் பொடி தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

    இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
    ×