என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
அடுத்தடுத்த 4 கடைகளில் ஒரு லட்சம் கொள்ளை
4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருடப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையிலுள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபம் அருகேயுள்ள வணிக வளாகத்தில், சாமியப்பா நகரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் செல்வம் (வயது 39) காய்கனி கடையும், லோகநாதன் மனைவி விஜயலட்சுமி (32) ரியல் எஸ்டேட் அலுவலகமும், மீரா மொய்தீன் மகன் சமீர் (22) மளிகைக் கடையும் நடத்தி வருகின்றனர். மேலும், அதே வணிக வளாகத்தில் நியாயவிலைக் கடையும் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட கடைகளை இரவு பூட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில், காலை ரேசன் கடை உள்பட 4 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது,
ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டிருந்தது. எஞ்சிய கடைகளில் பணம், இதரப் பொருள்கள் இல்லாததால் திருட முயற்சித்திருப்பதும் கண்டறியப்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story