என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதான குன்னம் அரசு ஆரம்பசுகாதார நிலைய சாலை.
அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சாலையை சீரமைக்ககோரி பொது மக்கள் மனு
குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வர குன்னம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை பொது மக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை இருபுறமும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் 108 வாகனங்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பொழுது வாகனங்களை உரசி உள்ளே அமர்ந்திருக்கும் நோயாளிகள் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் உள்ளது.
மேலும் குன்னத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்கள் அதிக அளிவில் செக்கப் செய்ய வருகின்றனர். அப்படி அவர்கள் இந்த சாலைகளில் வரும்பொழுது கரடு முரடான பாதைகளில் வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மிகவும் சோர்வடைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைகின்றனர். குன்னம் காவல் நிலையத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை உள்ள சாலைகள் மிகவும் கரடுமுரடாக வாகனங்கள் செல்ல தகுதியற்ற முறையில் இருந்து வருகிறது.
எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்துதர வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story