என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வேளாண்மை அறிவியல் பாடப்பிரிவை பொது கல்வியாக மாற்ற கோரிக்கை

    வேளாண்மை அறிவியல் கல்வி பாடப்பிரிவை பொது கல்வியாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வேளாண்மை அறிவியல் கல்வி பாடப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அச்சங்க மாநில தலைவர் அக்ரி.மாதவன், செயலாளர் பகுத்தறிவு, பொருளாளர் ராமன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

    தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் வேண்டுகோள் ஏற்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்-கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத குறைவான இடங்களுக்கு பதிலாக இந்த

    கல்வி ஆண்டு முதல் அரசு கல்லூரிகளில் கூடுதலாக இடங்கள் 98 இடங்கள் வழங்கியமைக்கும், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைவு பெற்ற தனியார் கல்லூரி-களிலும் இந்த ஆண்டு முதல் 5 சதவீத இடஒதுக்கீடு செய்து 100 இடங்கள் வழங்கி-யமைக்கும்,

    இட ஒதுக்கீட்டிற்காக வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட பழங்குடியின மாணவர் சந்திரனுக்கு வேளாண்மைக் கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்கி உத்தர-விட்டமைக்கும், கால்-நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பிரிவு

    மாணவர்-களுக்கு வழங்கப்படும் 5 சதவீத இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக 7.5 சதவீத இட-ஒதுக்கீடு வழங்கியமைக்கும், வேளாண் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், பணி விதிகள் உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர், வேளாண்மை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள்,

    வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், ஆணையர், இணை இயக்குநர் ஆகியோருக்கு சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    குறிப்பிட்ட மேல்-நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 ம்-வகுப்புகளில் தொழிற்-கல்வி பாடபிரிவில் உள்ள வேளாண்மை அறிவியல் கல்வி பாடபிரிவினை பொது கல்வியாக மாற்றி அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 6 ம் வகுப்பு முதல் 12ம்-வகுப்பு வரை நடை முறைப்படுத்த வேண்டும்,

    சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதியின் அடிப்படையில் வேளாண்மை முதுநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.   
    Next Story
    ×