என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தொடங்கியது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வுக்கான நேர்காணல் பெரம்-பலூர் புது-பஸ்ஸ்டாண்ட் எதிர் புறம் உள்ள கால்நடை மருந்த வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
இந்த நேர்காணல் 22&ந்தேதி வரை நடை-பெறுகிறது. இப்பணிக்கு விண்ணப்பித்-தோருக்கு நேர்-காணலுக்கான அழைப்-பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தங்கள் விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள தகுதி-களுக்கான அனைத்து மூலச்-சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை அசலுடன் நேர்-காணலில் கலந்துகொள்ள அறிவிக்கப்-பட்டிருந்தது.
இதன்படி காலையில் அதிகளவிலான பேர் நேர்காணலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்றிந்தனர். மண்டல இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோர் தலைமையில், துணை இயக்குநர் குணசேகர், உதவி இயக்குநர் மும்மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர்
சான்றிதழ் சரிபார்ப்பு, கால்நடை கையாளும் திறன் அறிதல், சைக்கிள் ஓட்டும் திறன் அறிதல் மற்றும் நேர்காணலை நடத்தினர். நேர்காணல் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் நல அலுவலர் ரமண-கோபால் நேர்காணல் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் 400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பட்டிருந்தது. இதில் நேற்று 267 பேர் நேர்காணலில் கலந்து-கொண்டனர்.
Next Story






