என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கிணற்றில் விழுந்தவர் மீட்பு

    கிணற்றில் விழுந்து தத்தளித்தவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எறைய சமுத்திரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (வயது 48). இவர் தனது வயலில் உள்ள சுமார் 50 அடி ஆழ கொண்ட கிணற்றில் இறங்கி நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்துவிட்டு மேலே ஏறும்போது

    தவறி விழுந்து அடிபட்டு ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றுக்குள் இறங்கி ரமேசை மீட்டனர். 
    Next Story
    ×