என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி குத்து விளக்கு ஏற்றி தொடங்
    X
    மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி குத்து விளக்கு ஏற்றி தொடங்

    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சி நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  தனலெட்சுமி சீனிவாசன்   மேல்நிலைப் பள்ளியில்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  சார்பில் மாவட்ட அளவிலான  அறிவியல்  கண்காட்சி  நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட  வருவாய் அலுவலர்  அங்கையற்கண்ணி தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில் உணவு, மெட்டீரியல்ஸ் பொருட்கள், நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் உலகம், நகரும் பொருட்கள்,  ஹவ் திங்க்ஸ் வொர்க், இயற்கை பெனாமினா,    இயற்கை வளங்கள் உள்ளிட்ட  7 தலைப்புகளில் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி  கூறியதாவது:

    பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தும் நோக்கம்  என்னவென்றால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கையில் அறிவியல் பற்றி  தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் விஞ்ஞானம் எல்லா இடத்திலும் கலந்துள்ளது. 

    ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்   அறிவியலைப் பற்றி ஆசிரியர் பெருமக்களுடன் கலந்துரையாடி அந்த வேலைகளை  தனித்தனியாக   இல்லாமல்  ஒரு குழுவாக இணைந்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த  அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    மேலும் உங்களுக்கு  எந்த உதவி தேவைப்பட்டாலும் அந்த உதவியை மாவட்ட நிர்வாகம் செய்வதற்கு தயாராக உள்ளது. உங்களுடைய ஆசிரியர்  பெருமக்களும் அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும்  நல்குவார்கள்.

    படிக்கும் மாணவ மாணவிகள் நன்றாக படித்து நல்ல பெயரினை வாங்கிக் கொடுத்து உங்களது வாழ்க்கையில் நல்லமுறையில்  முன்னேறவும், அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் இது  போன்ற கண்காட்சிகள் நடத்தப் படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×