என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
குடி நீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடி நீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி கிராம ஊராட்சிக்குள்பட்ட வேப்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால், அப்பகுதி மக்கள் ஆழ்குழாய் கிணறுகளிலும், வயல்வெளி பகுதிகளுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் குன்னம் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குன்னம் போலீசார், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர் . மறியலால் வேப்பூர் குன்னம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story