என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  வெங்காய விலை வீச்சியால் விவசாயிகள் கவலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்காய விலை வீச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம்  பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை பகுதிகளில் விவசாயிகள் ஆண்டுக்கு இரு பருவம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். நடப்பு ஆண்டில் வெங்காய சாகுபடி பரப்பளவு 5 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

  சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு எதிர்பார்த்த விளைச்சலை பெற்றனர். ஆனால் எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. மார்கெட்டில் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்யும் வெங்காயத்தை காய வைத்து மூட்டைகளில் கட்டி அடுக்கி வைத்து வருகிறார்கள்.

  அடைக்கம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பெரியசாமி கூறும்போது, நான் 4 ஏக்கர் பரப்பளவில்  சின்ன வெங்காயம் சாகுபடி செய்தேன். ஒரு ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் செலவழித்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 50 மூட்டை சின்னவெங்காயம் அறுவடை செய்தேன்.

  ஆனால் உள்ளூர் வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்துக்கு ரூ. 10 விலை நிர்ணயம் செய்கிறார்கள். கடந்த ஆண்டு வெங்காயம் அழுகி நஷ்டம் ஏற்பட்டது. இப்போது நல்ல விளைச்சலை பெற்றிருக்கிறோம். ஆனால் விலையை கேட்டால் மயக்கம் வருகிறது. விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வெங்காயத்துக்கு ஆதார விலை கேட்டு மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  எனவே அறுவடை செய்த வெங்காயத்தை தோட்டத்தில் பாதுகாத்து வருகிறேன். தற்போது 150 மூட்டை வெங்காயம் தோட்டத்தில் இருக்கிறது. மார்கெட் நிலவரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே கடன் தவணையை எப்படி? கட்டுவது என தெரியவில்லை என்றார்.

   நாட்டார் மங்கலத்தை நேரு என்ற விவசாயி கூறும்போது, ஆலத்தூர் வட்டாரத்தில் நிறைய விவசாயிகள் வெங்காயத்தை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர். நான் 7 ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டு 12 டன் அறுவடை செய்தேன். இதில் 4 டன் மட்டுமே விற்பனை செய்துள்ளேன். மீதம் உள்ள வெங்காயம் தோட்டத்தில் இருக்கிறது என்றார்.

  திருச்சியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, மைசூர் மற்றும் பல்லடம் வெங்காய வரத்து அதிகமாக இருக்கிறது. ரூ. 15க்கு விவசாயிகள் வெங்காயத்தை விற்பனை செய்கிறார்கள். அதனால் இப்போதைக்கு விலை ஏற வாய்ப்பு இல்லை என்றார்.
  Next Story
  ×