search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலைப்பட மாட்டோம்-கோவை ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு
    X

    எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலைப்பட மாட்டோம்-கோவை ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு

    • அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரியையும் அதிகப்படுத்தி உள்ளனர்.

    கோவை

    தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே செல்வராஜ், செ.தாமோதரன், கே. ஆர் ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்பட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    அ.தி.மு.க ஆட்சியில் எந்த வரியையும் ஏற்றவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக உள்ள இந்த தி.மு.க. அரசு வரிகளை ஏற்றி வருகிறது. சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரியையும் அதிகப்படுத்தி உள்ளனர். அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியை பலரும் வீழ்த்த நினைத்தனர். தி.மு.க. குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைத்தது. ஆனால் நானும், தங்கமணி, சண்முகம் இன்னும் சிலரும் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றினோம். அதனால் என் மீது ஸ்டாலினுக்கு கோபம். அப்போதே அவர் எஸ்.பி.வேலுமணியை விடமாட்டோம் என கூறினார்.அதன் தொடர்ச்சியாகவே என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை நடத்தி உள்ளனர். 3 முறை சோதனை நடத்தி உள்ளீர்களே? இதுவரை எனது வீட்டில் இருந்து எந்த பொருட்களை எடுத்து சென்றீர்கள்? ஒன்றும் இல்லை. வெறுங்கையுடன் தான் சென்றுள்ளீர்கள்.நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் கவலை படமாட்டோம். எங்களுக்கு துணையாக எப்போதும் தொண்டர்கள் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எந்த காரியம் முடிக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டிய நிலையே இந்த ஆட்சியில் உள்ளது. ஆட்சி அமைத்து சில வருடங்களிலேயே 50 ஆயிரம் கோடிக்கும் மேல் தி.மு.க அரசு லஞ்சம் வாங்கியுள்ளது. இப்படி மக்களை சுரண்டும் ஆட்சியாகவே உள்ளது.

    எங்கள் ஆட்சியின்போது நாங்கள் எந்த கடையிலும் வசூல் செய்யவில்லை. கட்டப்பஞ்சாயத்து நடத்தவில்லை. காவல்துறை யினர் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆனால் இன்று நிலை அப்படியில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடுகிறது. அனைத்து கடைகளிலும் தி.மு.க.வினர் வரி வசூலிக்கி ன்றனர். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை.

    கோவை மாவட்டத்திற்கு நாங்கள் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தோம். ஆனால் ஆட்சி அமைத்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் தி.மு.க. கோவை மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஒரு பொம்மை போலவே இருக்கிறார்.எனது வீட்டில் சோதனை நடந்தபோது எம்.எல்.ஏ.க்களையும், தொண்ட ர்களையும் கையை பிடித்து இழுத்து வலுக்க ட்டாயமாக கைது செ ய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மு.க.ஸ்டாலின் அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார். இதுபோன்ற மோசமான ஒரு தலைவரை இதுவரை பார்த்ததே இல்லை.

    உதயசந்திரன் ஐ. ஏ.எஸ். தி.மு.க.வினரை விட மோசமாக உள்ளார். நேர்மை போல காட்டி கொண்டு கொள்ளை அடிப்பதற்கு துணை போகிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றனர். அதன்பின்னர் அவர்களை ஆளையே காணவில்லை. அனைவர் மீதும் பொய் வழக்கு போட்டு வரும் இந்த தி.மு.க ஆட்சி விரைவில் மண்ணை கவ்வும். மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடினர். தற்போது முதல்-அமைச்சராக அவரது ஆட்சி நடைபெறும் வேளையில் திருப்பூரில் லேடீசுக்கு என்று தனி பாரே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×