என் மலர்
நீலகிரி
- இந்த கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி கிடையாது.
- பல ஆண்டுக்கு பிறகு பஸ் சேவை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமம் செம்மநாரை.
இந்த கிராமத்தை சுற்றி கனுவட்டி, கோழிக்கரை, மேல் கூப்பு, கீழ் கூப்பு, தாலமொக்கை உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.
இந்த கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளை கடந்தும் இதுவரை பஸ் வசதி கிடையாது. நடந்தே பல பகுதிகளுக்கும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வந்தனர். எங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு மனு அளித்து வந்தனர்.
இந்த நிலையில் பழங்குடியின கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த கிராம பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து செம்மநாரை வரை பஸ் இயக்கி வெள்ளே ாட்டமும் பார்க்கப்பட்டது.
இதில் வெள்ளோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து நேற்று கோத்தகிரி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செம்மநாரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
பஸ்சை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட போக்கு வரத்து கழக மேலாளர் நட்ராஜ், கோத்தகிரி போக்குவரத்து பணிமனை மேலாளர் ஞான பிரகாஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் குமார், தலைவர் ரத்தனகுமார், பொருளாளர் ஸ்டீபன் மற்றும் ஆனந்தன், நிரேஷ்கு மார், கோபாலகிருஷ்ணன், யோகரத்தினம், ராமலிங்கம், ரவி, குமார், எர்க்குலர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது.
- பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்ட பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 3. 5.2023 மற்றும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 4. 5.2023 ஆகும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த இணையத ளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற You Tube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தே ர்விற்கான காணொலியை கண்டு பயன்பெறுமாறும், நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்விற்கு வி ண்ணப்பி த்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கீழ்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ். கைகாட்டியில் தனியார் கூட்டரங்கில் நடந்தது.
- ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன் தலைமை வகித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ். கைகாட்டியில் தனியார் கூட்டரங்கில் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன் தலைமையில் தி.மு.க. பாகநிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை கழக குன்னூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாண்டி செல்வம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, கருப்பையா, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராமகோபால், வின்சென்ட், முருகன், ஆதித்தன், ராஜேந்திரன், எஜமான் அய்யா, கஸ்தூரி பா நகர் குமார், சுரேஷ், மோகன், அமிர்தலிங்கம், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளராக நியமிக்க பட்டிருக்கும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜாவுக்கு குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில் பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொது குழு உறுப்பினர் செல்வம் நகர துணை செயலாளர் வினோத், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர்கான், மன்சூர், குமரேசன், இளைஞர் அணி பத்மநாபன், வெலிங்டன் நகரிய செயலாளர் மார்டின், நகர பொருளாளர் ஜெகநாதராவ், தி.மு.க நிர்வாகிகள் கோவர்தணன், மணிஅல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
- தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர்.
- சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.
ஊட்டி,
கூடலூர் தாலுகா தேவாலா அருகே கோட்ட வயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.
இவரது தோட்டத்தில் குடிநீர் தரைக்கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் தினமும் தண்ணீர் எடுத்து அந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத் தன்றும் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றனர்.
அப்போது கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது, சிறுத்தை ஒன்று உள்ளே இறந்த நிலையில் கிடந்தது.
சிறுத்தை கிணற்றுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து கிணற்றுக்குள் கிடந்தது பெண் சிறுத்தை என்பதும், வனத்தை விட்டு வெளியே றிய சிறுத்தை தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தே கிக்கின்றனர்.
மேலும் கிணற்றுக்குள் பிடித்து கொள்ள வேறு வழி இல்லாததால் தண்ணீ ரில் தத்தளித்தவாறு திரிந்த சிறுத்தை சிறிது நேரத்தில், மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கிணற் றுக்குள் விழுந்து இறந்த சிறுத்தையை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் அங்கி ருந்து சென்றனர்.
நேற்று காலை முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பெண் சிறுத்தை யின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பா கங்களை சேகரித்து விட்டு சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.
இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, சுமார் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீர் அல்லது இரையை தேடி வந்த போது கிணற்றுக்குள் விழுந்து மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.
- தொட்டபெட்டா மலை சிகரம், லேம்ஸ்ராக் காட்சி முனை, கொடநாடு காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
- படகு சவாரி செய்து ஏரியின் ரம்மியமான இயற்கையை கண்டு ரசித்தனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்தும், எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியதாகும்.
இந்த சுற்றுலா தலங்களையும், இயற்கை காட்சிகள் மற்றும் குளு, குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலில் இருந்து குளு, குளு சீசனை அனுபவிப்பதற்காகவும், இதமான காலநிலையை தேடியும் சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்களை நோக்கி பயணித்து வருகின்ற னர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த மாதத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
தற்போது தமிழ்புத்தாண்டு தொடர் விடுமுறை, கோடை காலம் தொடங்கிவிட்டதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை வருகை தருகிறார்கள்.
கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா மலைசிகரம், சிம்ஸ்பூங்கா, நேரு பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு மலர் கண்காட்சியையொட்டி அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மலர்களை பார்வையிட்டு, புல் தரையில் அமர்ந்து குடும்பத்துடன் பேசியும், விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.
தொட்டபெட்டா மலை சிகரம், லேம்ஸ்ராக் காட்சி முனை, கொடநாடு காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் காட்சிமுனைகளை பார்வையிட்டு, இயற்கை அழகினை ரசித்தபடி புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். படகு இல்லத்தில் குவியும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து ஏரியின் ரம்மியமான இயற்கையை கண்டு ரசித்தனர்.
ஊட்டி, குன்னூரில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அங்கு யானை சவாரி, வாகன சவாரி செய்கின்றனர்.
வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு அதனுடன் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.
கோடை சீசன் தொடங்கியதையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று முதல் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
ரெயிலில் செல்லும் போது, இயற்கை காடுகளின் அழகு, அங்கு வாழும் வனவிலங்குகள், நீர்வீழ்ச்சிகளை பார்த்தபடியே பயணிக்கும் அனுபவம் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையாக இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக சென்று வருகிறார்கள்.
நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும், அதனையொட்டி கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
- சித்திரை 2-ந் தேதி மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோத்தகிரி,
சித்திரை 1-ந் தேதி தமிழர்களின் புது வருட பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கு அடுத்த நாள் மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி விஷூ கனிக்கு முந்தைய தினம் பூ, பழங்கள், நகைகளின் மூலம் பூஜையறையில் உள்ள சாமி சிலைகள் மற்றும் போட்டோக்களை அலங்கரித்து அடுத்த நாள் காலை சூரிய உதயதிற்கு முன்பதாக குடும்பத்தினர் அனைவரும் அந்த அலங்கரிக்க ப்பட்ட சாமி சிலை மற்றும் போட்டோக்களை வணங்குவர். பின்பு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வணங்கி தங்களுடைய சக நண்பர்களுக்கு வீட்டில் வைத்து உணவுகளை அளித்து அவர்களுக்கு தங்களால் முடிந்த பணம் போன்றவற்றை வழங்குவர். இதனை கைநீட்டம் என்றும் அழைப்பர்.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள மலையாள மக்கள் காலை முதலே தங்களின் வீடுகளில் விஷூ கனி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி,
கூடலூர் நகராட்சி உட்பட்ட காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கூடலூர் நகராட்சி மூலமாக அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.இதற்கு இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நன்றி தெரிவித்தனர். காசிம்வயல் பகுதி மக்களின் சார்பில் முதல்-அமைச்சருக்கும், கூடலூர் நகரமன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ், நகராட்சி ஆணையாளர் ப்ரான்ஷிஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
- நீலகிரி மாவட்ட செயலாளர் பா.முபாரக் தலைமை தாங்கினார்.
குன்னூர்,
குன்னூர் நகர தி.மு.க சார்பில் நகர பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள், பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
நீலகிரி மாவட்ட செயலாளர் பா.முபாரக் தலைமை தாங்கினார்.குன்னூர் நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாண்டிய செல்வன் பூத் கமிட்டி அமைக்கும் பணி குறித்தும், புதிய உறுப்பினர்கள் படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் விளக்கி பேசினார்.
இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், துணைத் தலைவர் வாஷிம் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெற்றது.
- முடிவில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.
ஊட்டி,
ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெற்றது. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார்.
நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.ஊட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சத்தக்கத்துல்லா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர துணை செயலாளர்கள் இச்சுபாய், ரீட்டாமேரி, கிருஷ்ணன், பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், தம்பி இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மேத்யூஸ், ஜெயராம், ஆட்டோ ராஜன், தியாகு, மார்க்கெட் ரவி, அமலநாதன், சசிகுமார், வில்லியம், சித்திக், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்ணு, செல்வராஜ், மேரி பிளோரினா, பிரியா வினோதினி, திவ்யா, மீனா உட்பட கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக முன்னணியினர் திரளாக கலந்துகொண்டனர்.முடிவில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.
- ராஜேந்திரன் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தியுள்ளார்.
- வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமரின் வருகைக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பிற பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அதே தினம் மதியம் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஊட்டிக்கு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தொட்டபெட்டா காட்சி முனை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அப்போது அங்கு பணியில் இருந்த கோத்தகிரி போக்குவரத்து சப்-இ ன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொட்டபெட்டா முதல் சேரிங்கிராஸ் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தி அங்கிருந்து பிற போலீசார் உதவியுடன் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை பாராட்டியதுடன் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.
- வாக்குவாதம் முற்றவே, டாஸ்மாக் ஊழியர், மதுபாட்டில் வாங்க வந்த நபரை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
- அந்த நபர் நான் எதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அரவேணு:
கோத்தகிரி அருகே குன்னூர், ஊட்டி செல்லும் சாலை கட்டபெட்டு சந்திப்பில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கடையில் அதிகாலை நேரங்களில் மதுக்கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நாள்தோறும் இந்த கடைக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒருவர் மதுபான கடைக்கு வந்தார்.
பின்னர் மதுபாட்டில்களை வாங்கினார். அப்போது அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர், கூடுதல் விலையாக ரூ.10 தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
ஆனால் அந்த நபர் நான் எதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே, டாஸ்மாக் ஊழியர், மதுபாட்டில் வாங்க வந்த நபரை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மது பாட்டில் வாங்க வந்த வாடிக்கையாளரை டாஸ்மாக் ஊழியர் தகாத வார்த்தையால் திட்டிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






