என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 15 மையங்களில் இன்று நீட் தேர்வு- 8,767 பேருக்கு அழைப்பு

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் 6,879 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 1,888 மாணவ-மாணவிகள் தேர்வு எழுது கின்றனர்.

    நெல்லை:

    மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தகுதி தர்வு இன்று நாடு முழுவதும் நடக்கிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வு நடைபெறுவதை யொட்டி முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு தயார்நிலையில் மையங்கள் இருந்தன.

    15 மையங்கள்

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் 960 பேரும், எப்.எக்ஸ். மேல்நிலைப்பள்ளியில் 375 பேரும், மகாராஜாநகர் ஜெயேந்திரா பள்ளியில் 480 பேரும், தென்காசி மாவட்டம் ஏ.வி.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் 480 பேர் உள்பட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 12 மையங்களில் 6,879 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி உள்பட மொத்தம் 3 மையங்களில் 1,888 மாணவ-மாணவிகள் தேர்வு எழுது கின்றனர். இதனையொட்டி தேர்வு மையங்களில் மாண வர்களின் பதிவெண்களை ஒட்டி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

    மேலும் நெல்லை, தூத்துக்குடி மாநகர பகுதி களில் உள்ள தேர்வு மையங்களை தூய்மை ப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணி யும் சுகாதாரத்துறை யினரால் மேற்கொள்ள ப்பட்டது. இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வானது மாலை 5.20 மணி வரை நடக்கிறது.

    தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அனைத்து மையங்களின் உள்புறமும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதுதவிர தேர்வுத்துறை அதி காரிகளின் உத்தரவின்பேரில் அனைத்து மையங்களிலும் துல்லியமாக நேரத்தை அறியும் விதமாக கடிகாரங்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

    மேலும் தேர்வின்போது மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மின்தடை ஏற்படவில்லை. கடுமையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்படு வார்கள். பெரும்பாலான தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே தேர்வு கூடங்களுக்கு வந்தனர். அவர்களுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். தேர்வையொட்டி இன்று காலை முதல் அனைத்து தேர்வு மையங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    Next Story
    ×