என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள தலித் மக்கள் கிராமத் தலைவர் ஆனந்தராசு தலைமையில் மாவட்ட கலெக்டர் பழனிசாமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் சுமார் 450 தலித் குடும்பங்களும், 460 சாதி இந்து குடும்பங்களும் வசித்து வருகிறோம். இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாட்டு உரிமையும், மண்டகப்படி உபயம் கேட்டு பல போராட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எங்களுக்கு எவ்வித உரிமையையும் வழங்கப்படவில்லை.
ஆகவே நாங்கள் இந்து என்று சொல்வதில் வெட்கப்படுகிறோம். எங்களுக்கு உபயதாரர் உரிமை பெற்றுத்தர வேண்டும். அப்படி மனித மாண்பு காக்கப்படவில்லையெனில் சமூக நீதி காக்கப்படாத இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாமிய மதத்திற்கு பழங்கள்ளிமேட்டில் வசிக்கும் அனைவரும் மாறுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பழங்கள்ளி கிராமத்தை சேர்ந்த 200 தலித் குடும்பத்தினர், நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 35 தலித் குடும்பத்தினர் உள்பட 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற போவதாக விடுத்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
இஸ்லாம் மதம் மாறுவது தொடர்பாக ரேசன் கார்டுகளில் உள்ள தங்களது பெயர்களை மாற்றி தரக்கோரி அவர்கள் போராட்டமும் நடத்தினர்.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை நேற்று மாலை சிலர் அனுமதியின்றி வெட்டி எடுத்து செல்வதாக சீர்காழி தாசில்தார் மலர்விழிக்கு தகவல் வந்துள்ளது.
இதன் பேரில் தாசில்தார் மலர்விழி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது சிலர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரம் இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி 2 டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் டிராக்டர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் 2 டிராக்டரிகளிலும் சுமார் 10 டன் அளவிற்கு மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மரங்களுடன் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த தாசில்தார் மலர்விழி அதனை சீர்காழி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே உள்ள மேமாத்தூர் பகுதியில் எந்திர நடவு செய்வதால் பாதிக்கப்பட்ட விவசாய கூலி தொழிலாளிகள் எந்திர நடவுக்கு தடை விதித்து கைகளால் நடவு செயவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார், ஆனால் தொடர்ந்து அங்கு எந்திர நடவு நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து மேமாத்தூர் விவசாயிகள் மயிலாடுதுறையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தது.
அதன்படி மயிலாடுதுறை ஆர்டி.ஓ. அலுவலகம் முன்பு மேமாத்தூர்விவசாய தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை விவசாய சங்க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து நாகை மாலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எந்திர நடவுக்கு தடை விதிக்க வேண்டும். கூலி தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகை வலியுறுத்தி தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் கூறினர்.
இதையொட்டி திருச்சி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், புல்வெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (50). அதே ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த விவசாயிகள் ஆவார்.
இவர்களுக்குள் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமிழ்செல்வத்தின் பசுங்கன்று குட்டியை கல்லை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரனை தமிழ்செல்வன் கேட்டபோது ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கத்தியால் தமிழ்செல்வனை குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த தமிழ்செல்வன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மறைஞாயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். விவசாயி. இவர் சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருள்சாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முருகையன் படுகாயமடைந்தார்.
முருகையனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப் –இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து அருள்சாமியை கைது செய்தார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி ஈஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் கலைவாணன் (25). நெல் அறுவடை எந்திர டிரைவர்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராமையன். இவரது மகள் நிவேதா (24). பி.இ. பட்டதாரி. ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. அவர்கள் நீ என்ஜினீயரிங் படித்தவர். கலைவாணன் சாதாரண டிரைவர் என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கலைவாணன் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் காதல் ஜோடி மனம் உடைந்தது.அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று மதியம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள தோப்பிற்கு சென்றனர். அங்கு இருவரும் விஷம் குடித்தனர். இதில் மயங்கி விழுந்தனர். இதனை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து இருவரையும் 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் நிவேதாவை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். காதலன் கலைவாணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நிவேதாவின் பெற்றோர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகளுக்கு விஷத்தை ஊற்றி கொடுத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஆறுபாதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி ஈஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் கலைவாணன் (25). நெல் அறுவடை எந்திர டிரைவர்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராமையன். இவரது மகள் நிவேதா (24). பி.இ. பட்டதாரி. ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. அவர்கள் நீ என்ஜினீயரிங் படித்தவர். கலைவாணன் சாதாரண டிரைவர் என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கலைவாணன் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் காதல் ஜோடி மனம் உடைந்தது.
அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று மதியம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள தோப்பிற்கு சென்றனர். அங்கு இருவரும் விஷம் குடித்தனர்.
இதில் மயங்கி விழுந்தனர். இதனை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து இருவரையும் 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் நிவேதாவை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
காதலன் கலைவாணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நிவேதாவின் பெற்றோர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகளுக்கு விஷத்தை ஊற்றி கொடுத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஆறுபாதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை சாமந்தான் பேட்டையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் சாமந்தான் பேட்டையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த சிறிய துறைமுகம் அமைக்க வேண்டும்.
மீன்களை இறக்க மீன்பிடி இறங்கு தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் சாமந்தான் பேட்டை மீனவ பஞ்சாயத்தாரின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முதல் இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 500 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. அவர்களது 20 விசைப்படகு, 150 பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம் புலத்தில் சீதள மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் சரவணக்குமார் (15) தேரோட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் மீது தேர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இவர் 10-ம் வகுப்பு மாணவர் ஆவார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் யோகிதா பயிற்சி மையத்தில் மகளிரை குடும்பத்தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் தொழிற்திறன் பயிற்சியினை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில கூறியதாவது:–
பெண்கள் தனியாகவோ கூட்டாகவோ சேர்ந்து ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்களது கவனத்தை முழுமையாகச் செலுத்தி மனம் தளராமல் ஈடுபாட்டுடன் உழைப்பதன் மூலம் தாம் தேர்ந்தெடுத்த தொழிலில் முன்னேற்றம் காணமுடியும்.
கணவரால் வருவாய் ஈட்ட முடியாமல் இருக்கும் மகளிர், தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். எல்லோரும் படிப்படியாக உயர்ந்து தான் மேல்நிலையை அடைய முடியும். இந்த பயிற்சி மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட மகளிருக்கு அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியின்நோக்கம் மகளிரின் எதிர்காலத்தை மேம்படுத்துவதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமதி, உதவித் திட்ட அலுவலர் அருணகிரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள மருதம்பள்ளம் ஊராட்சியில் சின்னமேடு வடக்குதெருவை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் திருமுருகன் (வயது 23) மீனவர்.
இவர் அதே பகுதியில் வசிக்கும் 2 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுபற்றி அப்பகுதி மக்கள் பொறையார் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் சாமிநாதன் (53). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அதே ஊரே சேர்ந்தவர் சாமிநாதன் அண்ணன் பஞ்சநாதன் மகன் குமார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
சாமிநாதன் கடைக்கு சென்று வரும் போது மீன் வியாபாரம் செய்து விட்டு வீடு திரும்பிய குமார் மந்திரம், மாந்திரீகம் செய்து எனது குடும்பத்தை முன்னேற விடாமல் செய்து விட்டாயே என்று தரக்குறைவாக பேசி அரிவாளால் சுவாமிநாதனை இரு கால்களிலும் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
பலத்த காயமடைந்த சாமிநாதன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சப்–இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை வலைவீசி தேடி வருகிறார்.






