என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம்
    X

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம்

    வேதாரண்யம் அருகே விவசாயி படுகாயம் அடைந்த விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மறைஞாயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். விவசாயி. இவர் சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருள்சாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முருகையன் படுகாயமடைந்தார்.

    முருகையனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப் –இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து அருள்சாமியை கைது செய்தார்.

    Next Story
    ×