என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் மகளிருக்கு வாழ்வாதாரத் திட்ட தொழிற்திறன் பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    நாகையில் மகளிருக்கு வாழ்வாதாரத் திட்ட தொழிற்திறன் பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

    நாகை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் யோகிதா பயிற்சி மையத்தில் மகளிரை குடும்பத்தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் தொழிற்திறன் பயிற்சியினை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    பின்னர் அவர் பேசுகையில கூறியதாவது:–

    பெண்கள் தனியாகவோ கூட்டாகவோ சேர்ந்து ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்களது கவனத்தை முழுமையாகச் செலுத்தி மனம் தளராமல் ஈடுபாட்டுடன் உழைப்பதன் மூலம் தாம் தேர்ந்தெடுத்த தொழிலில் முன்னேற்றம் காணமுடியும்.

    கணவரால் வருவாய் ஈட்ட முடியாமல் இருக்கும் மகளிர், தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். எல்லோரும் படிப்படியாக உயர்ந்து தான் மேல்நிலையை அடைய முடியும். இந்த பயிற்சி மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட மகளிருக்கு அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியின்நோக்கம் மகளிரின் எதிர்காலத்தை மேம்படுத்துவதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயிற்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமதி, உதவித் திட்ட அலுவலர் அருணகிரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×