என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கோரி நாகை சாமந்தான் பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்தம்
    X

    மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கோரி நாகை சாமந்தான் பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்தம்

    மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கோரி நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை சாமந்தான் பேட்டையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் சாமந்தான் பேட்டையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த சிறிய துறைமுகம் அமைக்க வேண்டும்.

    மீன்களை இறக்க மீன்பிடி இறங்கு தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சாமந்தான் பேட்டை மீனவ பஞ்சாயத்தாரின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று முதல் இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 500 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. அவர்களது 20 விசைப்படகு, 150 பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×