என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி
    X

    வேதாரண்யம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி

    வேதாரண்யம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம் புலத்தில் சீதள மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் சரவணக்குமார் (15) தேரோட்டத்தில் பங்கேற்றார்.  அப்போது அவர் மீது தேர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இவர் 10-ம் வகுப்பு மாணவர் ஆவார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேர் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×