என் மலர்
நாகப்பட்டினம்
தலைஞாயிறில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு ஒன்றியகுழுத்தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா வரவேற்றார்.
தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கிய பேரணி மேலத்தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது.விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களுக்கும் வணிக வளாக நிறுவனங்களுக்கும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முடிவில் சுகாதார ஆய்வாளர் பட்டாபிராமன் நன்றி தெரிவித்தார்.
திருமருகல் அருகே சாராய கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தேப்பி–ராமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகுமார் மகன் அபிமன்யு (வயது 20). இவர் கடந்த 15-ம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து திருவாரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாராயத்தை மூட்டையில் வைத்து கடத்தி சென்றுள்ளார்.
அப்போது அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் அபிமன்யுவை விரட்டி பிடிக்க முயன்றுள்ளார்.அப்போது மோட்டார் சைக்கிளை விட்டு அபிமன்யு தப்பி சென்று தலைமறைவானார்.
இந்த நிலையில் திருக்கண்ணபுரம் போலீசார் அபிமன்யு மீது வழக்கு பதிவு செய்து அபிமன்யுவை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிமன்யுவை திருப்புகலூர் கடைத்தெருவில் கைது செய்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்து சிறையில் அடைத்தார்.
வேதாரண்யம் பகுதியில் கோடைக்கால நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், பெரியகு த்தகை, நாலுவேதபதி, செட்டிபுலம், கத்தரிப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 ஏக்கரில் கோடைக்காலத்தில் 90 நாட்களில் மகசூல் தரக்கூடிய நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலக்கடலை சாகுபடிக்கு தண்ணீரை மோட்டார் மூலம் இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நிலக்கடலை பூத்து பிஞ்சு விட ஆரம்பித்துள்ள நிலையில் செடியில் வெள்ளை நோய் மற்றும் மஞ்சள்புள்ளிநோய் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது இதனால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக கடலை சாகுபடியை பார்வையிட்டு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திட்டச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் வரவேற்றார்.
சித்த மருத்துவர் அஜ்மல்கான் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். முன்னதாக டெங்கு குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






