என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரியில் 4 இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
- மதியழகன் எம்.எல்.ஏ நடத்தி வைத்தார்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பில், அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்ட 4 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. இந்த விழாவிற்கு மிலாடி நபி விழாக்குழு தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரு மான அஸ்லம் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ஜாமீர், முகம்மது யஹியா, நதீம், கவுன்சிலர்கள் பிர்தோஸ்கான், மதீன், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கராமத் வரவேற்றார். விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் பீரோ, கட்டில், மெத்தை, கை கடிகாரம், சில்வர் பாத்திரங்கள், துணிகள் அடங்கிய சீர்வரிசையாக 4 ஜோடிகளுக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து பிரியாணி விருந்தை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தவைர் தட்ரஅள்ளி நாகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலா ளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ரியாஸ், முத்து குமரன், கவுன்சிலர்கள் வேலுமணி, மதன்ராஜ், ஜெயக்குமார், சீனிவாசன், முகமதுஆசிப், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராயக்கோட்டை அருகே பேட்டரி வெடித்து 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
- ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் அடுத்த நீலகிரி கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன். இவருடைய மகன் சரண் வயது 12. பேரிகை அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மாணவன் ஆசிரியர்கள் கூறியதால் புராஜக்ட் செய்தார்.
அவரது தந்தை வாங்கி கொடுத்த பேட்டரியை வைத்து மாணவன் சரண் புராஜக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினரான அடவிசாமிபுரத்தை சேர்ந்த அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வயது 10 என்பவர் சரணுடன் இருந்தார்.
பேட்டரியை கனெக்ட் செய்த போது வெடித்து சிதறியது. அப்போது பேட்டரியை கையில் வைத்திருந்த மாணவன் ஹரிசின் இரு விரல்கள் துண்டானது. மாணவன் சரணின் மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் மாணவர்களை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே பள்ளி, கல்லூரியில் படித்து வந்த 2 மாணவிகள் மாயமாகினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் பாவலுர் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 27ந்தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் மாணவி பற்றிய தகவல் இல்லை.
இது குறித்து மாணவியின் தந்தை ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதே போன்று ராயக்கோட்டை 2-வது தெருவை சேர்ந்தவர் 18 வயது மாணவி இவர் தருமபுரி அருகேயுள்ள மட்லம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியே செல்வதாக சொல்லி சென்றவர் வீடு திரும்ப வில்லை குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே உறவினர்கள் இடையே மோதலில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பரம்பரை சொத்து தொடர்பாக முன் விரோதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள எட்ரபள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (வயது60) பாலமுருகன் (வயது 40) அவரது மனைவி லெட்சுமிதேவி (வயது36) இவர்கள் 4 பேரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே பரம்பரை சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கடந்த 1ந்தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணன், பாலமுருகன் இவரது மனைவி லெட்சுமிதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையாலும், கையாலும் பிரகாஷ்வை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த பிரகாஷ் இது குறித்து குருபரபள்ளி போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது விசாரித்து வருகின்றனர்.
- கிராம சபை கூட்டத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி ஊராட்சியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராமத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், குடிநீர் வசதி, சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்கள் இதற்கு முன் நடைபெற்ற 2 கிராம சபை கூட்டத்தில், போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது.
மீண்டும் அதே தீர்மானங்கள் புதிய தீர்மானங்களாக எழுதப்பட்டதை கண்டித்து. ஏன் இது வரை தீர்மானங்கள் நிறைவேற்ற வில்லை எனக் கூறிவும், இதுவரை இந்த தீர்மானத்தை நிறைவேற்றப்படாததை கண்டித்து, 20 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விரைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி உறுதியளித்தார். இதனை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் கோவிந்தாபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தில் பால்காரன் கொட்டாய் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் தார் சாலை அமைத்தல், பள்ளிக்கு போதிய இடவசதி அமைத்து கொடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
இதேபோல் மிட்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய்கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. படப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமிராமாமிர்தம், வெங்கடத்தாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லதா, கீழ்மத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
- மத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- சாலை வசதி கோரி மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம். மத்தூர் ஊராட்சி மத்தூர்பதி மாரியம்மன் கோவில் வளாகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. கூட்டத்தினை தொடர்ந்து வீட்டுமனை பட்டா, தமிழக அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள், கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்து மனுக்களை பொது மக்கள் வழங்கியுள்ளனர்.
கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சித் துறை, காவல்த் துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, மக்கள் நலப்பணியாளர் ராஜா, அங்கன்வடி பணியா ளர்கள், நியாய விலை கடை பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
- மாவட்டம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி. காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு செல்லகுமார் எம்.பி. மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், வட்டாரத் தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில், கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கும், காந்தியின் படத் திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அர்னால்டு, வட்டாரத் தலைவர் நாராயணசாமி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சதாம், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பாண்டுரங்கன், சரவணகுமார், ஷாநவாஸ், முன்னாள் நகர தலைவர் தவமணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாநில செயற் குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- கதர் விற்பனை குறியீடாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், காந்தியடிகளின் 155வது பிறந்த நாளையொட்டி, காந்தியடிகளின் உருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் சரயு, மாலை அணிவித்து, படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றி, தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு தீபாவளி சிறப்பு கதர் விற்ப னைக்கென கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி அனுதிக்கப்பட்டுள்ளது. கதர் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் தீபாவளி கதர் விற்பனை குறியீடாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, இலக்கு எய்தப்பட்டது.
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு மற்றும் வண்ண பாலியஸ்டர் போன்ற உற்பத்திப் பொருட்களுடன், விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையினை முழு அளவில் பூர்த்தி செய்யும் நோக்குடன் கதர் விற்பனை உற்பத்திப் பொருட்களும் தருவிக்கப்பட்டு கிருஷ்ணகிரி கதர் அங்காடியில் விற்பனை செய்ப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டியல் புதியதாக உளர் பழங்கள், நெல்லி, பேரிச்சை, அத்திப்பழம் மற்றும் வால்நட்ஸ் ஆகியவைகளை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் தயார் செய்தும், இயற்கை முறையல் தயார் செய்யப்பட்ட ரசாயன கலப்படம் இல்லாத பாரம்பரியமிக்க பூங்கார், இரத்தசாலி, கருப்பு கவுனி, சீரகசம்பா, தூயமல்லி போன்ற அரிசி வகுகைள் மற்றும் பரிசுத்ததமாக மரசெக்கு எண்ணெய் வகைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில் அரசு தள்ளுபடி மற்றம் ஜிஎஸ்டி வரிவிலக்கினை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்களை கொள்முதல் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி, ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், காதி கிராப்ட் விற்பனை மேலா ளர் ஜானகிராமன், மாவட்ட காதிகிராப்ட் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் வசந்தி, தாசில் தார் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஓசூர் வார்டு பகுதிகளில் மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்
- ரூ. 3.86 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது
ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டிற்குட்பட்ட இமாம் பாடா, தாசரப்பேட்டை, ஏழு வீதி தெரு, ராஜு வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 3.86 லட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? எனவும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களின், குறைகளையும் கேட்ட றிந்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- கிருஷ்ணகிரியில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணகிரி அருகே சிட்கோ தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி சரஸ்வதி (வயது33). இவர் கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டில் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அடுப்பின் அருகே பாட்டிலில் இருந்த வெள்ளை மண்எண்ணை தவறி கீழே விழுந்தது. அதில் தீப்பொறி பற்றி திடீரென்று தீப்பிடித்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரஸ்வதியின் சேலையில் தீப்பற்றி அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயமடைந்தார்.
உடனே அவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீபக் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நடுபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் குமரேசன். இவரது மனைவி லோசிணி.
இவர்கள் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டர் சைக்கிளில் நடுபட்டுவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
அப்போது குமரேசன் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்தார். அவர்கள் சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் லோசிணி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். குமரேசன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து காயமடைந்த குமரேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த லோசிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் கண்முன்பே மனைவி இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஊத்தங்கரை அருகே புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நீண்ட நாட்களாக அரசு ஆரம்ப சுகாதார வளாகம் வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் பல முறை ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகவும் இதுவரை இப்பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து புங்கனை கிராம பொதுமக்கள் கூறியதாவது:-
புங்கனை பகுதியில் வசித்து வரும் நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு அரசு துணை சுகாதார நிலையம் அமைப்பது இப்பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தற்துபோது தமிழக அரசு புதியதாக துணை சுகாதார நிலையம் ஒன்றினை அமைக்க அரசாணை வெளியிட்டு அதற்கான பணியும் தொடங்கி உள்ளன. இந்த பணியானது புங்கனை பகுதியில் ஆரம்பிக்காமல் அருகே உள்ள மண்ணாடிப்பட்டி கிராமத்தில் போதுமான இடவசதி இல்லாத பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், புங்கனை பகுதியில் துணை சுகாதாரம் நிலையம் அமைப்பதற் காகவே சுமார் 41 சென்ட் நிலம் கடந்த 20 ஆண்டு களாக ஒதுக்கப்பட்டு இருப்பதா கவும் அவற்றில் கட்டினால் நிலையத்திற்கு போதுமான இடவசதி இருக்கும். எனவே உடனடியாக மண்ணாடிப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தில் தடுத்து நிறுத்தி புங்கனை பகுதியில் அமைத்திட வேண்டும்.
அவ்வாறு மாற்றி அமைக்க விட்டால், வருகிற 4-ந் தேதி புதூர் புங்கனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு புங்கனை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






