என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராசுவீதியில் உள்ள காந்தி சிலைக்கு, மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
- கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
- மாவட்டம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி. காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு செல்லகுமார் எம்.பி. மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், வட்டாரத் தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில், கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கும், காந்தியின் படத் திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அர்னால்டு, வட்டாரத் தலைவர் நாராயணசாமி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சதாம், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பாண்டுரங்கன், சரவணகுமார், ஷாநவாஸ், முன்னாள் நகர தலைவர் தவமணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாநில செயற் குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






