என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தியடிகள் 155-வது பிறந்த நாளையொட்டிகிருஷ்ணகிரியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை
    X

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தியடிகளின் உருவ சிலைக்கு கலெக்டர் சரயு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    காந்தியடிகள் 155-வது பிறந்த நாளையொட்டிகிருஷ்ணகிரியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை

    • கிருஷ்ணகிரியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • கதர் விற்பனை குறியீடாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், காந்தியடிகளின் 155வது பிறந்த நாளையொட்டி, காந்தியடிகளின் உருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் சரயு, மாலை அணிவித்து, படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றி, தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு தீபாவளி சிறப்பு கதர் விற்ப னைக்கென கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி அனுதிக்கப்பட்டுள்ளது. கதர் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் தீபாவளி கதர் விற்பனை குறியீடாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, இலக்கு எய்தப்பட்டது.

    தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு மற்றும் வண்ண பாலியஸ்டர் போன்ற உற்பத்திப் பொருட்களுடன், விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையினை முழு அளவில் பூர்த்தி செய்யும் நோக்குடன் கதர் விற்பனை உற்பத்திப் பொருட்களும் தருவிக்கப்பட்டு கிருஷ்ணகிரி கதர் அங்காடியில் விற்பனை செய்ப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

    மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டியல் புதியதாக உளர் பழங்கள், நெல்லி, பேரிச்சை, அத்திப்பழம் மற்றும் வால்நட்ஸ் ஆகியவைகளை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் தயார் செய்தும், இயற்கை முறையல் தயார் செய்யப்பட்ட ரசாயன கலப்படம் இல்லாத பாரம்பரியமிக்க பூங்கார், இரத்தசாலி, கருப்பு கவுனி, சீரகசம்பா, தூயமல்லி போன்ற அரிசி வகுகைள் மற்றும் பரிசுத்ததமாக மரசெக்கு எண்ணெய் வகைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில் அரசு தள்ளுபடி மற்றம் ஜிஎஸ்டி வரிவிலக்கினை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்களை கொள்முதல் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி, ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், காதி கிராப்ட் விற்பனை மேலா ளர் ஜானகிராமன், மாவட்ட காதிகிராப்ட் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் வசந்தி, தாசில் தார் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×