என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 மாணவிகள் மாயம்
- கிருஷ்ணகிரி அருகே பள்ளி, கல்லூரியில் படித்து வந்த 2 மாணவிகள் மாயமாகினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் பாவலுர் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 27ந்தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் மாணவி பற்றிய தகவல் இல்லை.
இது குறித்து மாணவியின் தந்தை ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதே போன்று ராயக்கோட்டை 2-வது தெருவை சேர்ந்தவர் 18 வயது மாணவி இவர் தருமபுரி அருகேயுள்ள மட்லம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியே செல்வதாக சொல்லி சென்றவர் வீடு திரும்ப வில்லை குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.






