என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமசபை கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு  தெரிவித்த வாலிபர்கள்
    X

    கிராமசபை கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்கள்

    • கிராம சபை கூட்டத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி ஊராட்சியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராமத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், குடிநீர் வசதி, சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்கள் இதற்கு முன் நடைபெற்ற 2 கிராம சபை கூட்டத்தில், போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது.

    மீண்டும் அதே தீர்மானங்கள் புதிய தீர்மானங்களாக எழுதப்பட்டதை கண்டித்து. ஏன் இது வரை தீர்மானங்கள் நிறைவேற்ற வில்லை எனக் கூறிவும், இதுவரை இந்த தீர்மானத்தை நிறைவேற்றப்படாததை கண்டித்து, 20 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விரைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி உறுதியளித்தார். இதனை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

    இதேபோல் கோவிந்தாபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார்.

    கிராம சபை கூட்டத்தில் பால்காரன் கொட்டாய் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் தார் சாலை அமைத்தல், பள்ளிக்கு போதிய இடவசதி அமைத்து கொடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

    இதேபோல் மிட்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய்கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. படப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமிராமாமிர்தம், வெங்கடத்தாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லதா, கீழ்மத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×