என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.
    • கோட்டை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990 அக்டோபர் மாதம் 10-ந்தேதி அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராமஜோதி ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சங்கர், பாபு, நரசிம்மய்யா, ராஜா ஆகிய 4 பேர் பலியாகினர்.

    அவர்களின் நினைவாக, தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் 4 ரோடு அருகே, நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந்தேதி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிகழ்ச்சியையொட்டி இன்று 33-ம் ஆண்டாக ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர் தேன்கனிக்கோட்டை போலீசாரிடம் முன் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவு நாளையொட்டி தேன்கனிக்கோட்டையில் இன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், இந்து அமைப்பினர் தடையை மீறி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்கவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும் கோட்டை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.

    அதனை போலீசார் தடுத்து நிறுத்தி மேடைகளை உடனே அகற்றுமாறு கூறினர். அந்த பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கெலமங்கலம் பேரூராட்சி சார்பில், மாரத்தான் நடை பெற்றது.
    • பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலை மை தாங்கி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி சார்பில், தகவலறியும் உரிமை சட்டம் விழிப்பு ணர்வு மாரத்தான் நடை பெற்றது.

    இதில் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலை மை தாங்கி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத் தார். செயல் அலுவலர் சுப்பிரமணி, துணைத்தலைவர் மும்தாஜ் சையத் அசேன் முன்னிலை வகித்தனர்.

    பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாக்ஷளர்கள், திடக்கழிவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்தார்.
    • மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது.

    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடை பெறுவதை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்து கூறிய தாவது: தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா 5ம் தேதி முதல் 12ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

    புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. பேரணியை தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார்.

    இந்நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மகாலிங் கமூர்த்தி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேஷ், விளையாட்டு அலு வலர் மகேஷ்குமார், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் விஜயகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
    • விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    \கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளி கிராமத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங் மற்றும் தேசிய லீன் ஆர்கனைசேஷன் ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி இணைந்து நடத்திய தேசிய வேளாண்மை சந்தைப்ப டுத்தல் பற்றி விவசாயிக ளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    இந்த பயிற்சி முகாமில் கணேஷ் தலைமை வகித்தார், கோலட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா வரவேற்பு ரை ஆற்றினார். இருது கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் கலந்து கொண்டு முகாமை தொ டங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    அறங்காவலர் முனி சங்க ரப்பா, விவசாயிகளுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவம் குறித்து பேசினார். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஆன்லைன் சந்தைப்படுத்தல் குறித்த அனைத்து புள்ளிவி வரங்களையும் பெங்களூரு வில் உள்ள நியூ ஹொரைசன் பொறியியல் கல்லூரியின் பயிற்சியாளரும் பேராசிரி யருமான டாக்டர் ரோஸ் கவிதா விவசாயம் குறித்த பிரதம மந்திரியின் பல்வேறு திட்டங்களைப் குறித்து. மற்றும் டிஜிட்டல் மார்க் கெட்டிங்கிற்கான பல்வேறு பயன்பாடுகளை விளக்க மாக கூறினார் .

    ஆற்றல் திறன் பயிற்சியா ளர் விஸ்வாஸ் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவசாயிகளுக்கு புரிய வைக்கும் ஒரு செயல் விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சிகான ஏற்பாடு களை லீன் அமைப்பின் இயக்குனர் பிரதிபா செய்தி ருந்தார்.

    முகாமில் 3 நாள் பயிற்சி கலந்து கொண்ட விவசாயி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பலியானவர்க ளின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
    • ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மாநில எல்லையில், பட்டாசு கடையில் நடந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.

    அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

    ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு குடோன் விபத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு வந்தனர். அங்கிருந்து காரில் அத்திப்பள்ளி வந்த அவர்கள் பலியானவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலியான 4பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.

    அதே போல படுகாயம் அடைந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கி னார்கள். மொத்தம் ரூ.44 லட்சத்திற்கான நிவாரண தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்போது மாவட்ட கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்),டி.ராமச்சந்திரன் (தனி), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா. உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பேட்டி

    பின்னர் அமைச்சர்மா.சுப்பிரமணியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நானும் அமைச்சர் சக்கரபாணியும் இங்கு வந்து இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளோம். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

    பொதுவாக தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக கடை கள் அமைத்து, அதற்கு தமிழகத்தை சேர்ந்த வர்களை அழைத்து வருவார்கள். இந்த விபத்தில் இறந்த வர்கள் பட்டாசு கடையில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.

    • முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுத்துள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முனிராஜ் (34). இவர் தனது விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடி பயிர்செய்திருந்தார். கடலை தோட்டத்திற்கு காட்டுப்பன்றிகள் வராமல் தடுப்பதற்காக திருட்டுதனமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் இரவு அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மஞ்சுநாத் (35) என்பவரை அழைத்து கொண்டு முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

    தோட்டத்தில் சிறுது நேரம் இருந்துவிட்டு மின்வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் மற்றொரு தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மஞ்சுநாத்தை அருகில் உள்ள குடிசையில் தூங்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நேற்று சுமார் 7 மணி அளவில் மஞ்சுநாத் குடிசையிலிருந்து எழுந்த வந்து பார்த்தபோது மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    இது குறித்து மஞ்சுநாத் உடனே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இறந்த முனிராஜிக்கு அம்சா (30) என்ற மனைவியும், கோமதி (11) என்ற மகளும் ஹேமந்த் (8) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
    • அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

    பொதுவாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து நடந்தால் தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடிப்பதாலும் அருகில் சென்று தீயை அணைப்பது சிரமமானதாகும். இதனால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததாலும் விபத்துகள் நிகழுகின்றன.

    கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

    • ஜலபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
    • இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்தூர்,

    போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி. இவரது மனைவி அபிஷால்மியா (25). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜலபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது.

    இதில் மனமுடைந்த அபிஷால்மியா கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • காளியப்பன் வளர்த்து வந்த மாடு, கிருஷ்ணனை முட்டியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

    சூளகிரி,

    சூளகிரி அருகே சென்னப்பள்ளி அருகே உள்ள கொண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (47). இவர்க ளின் நிலம் அருகருகில் உள்ளது. கடந்த 6-ந் தேதி காளியப்பன் வளர்த்து வந்த மாடு, கிருஷ்ணனை முட்டியது.

    இது தொடர்பாக பேசிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணனை காளியப்பன் கை, கல்லால் தாககினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

    • குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.
    • வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் (43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோன் இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் மாலை அந்த கடைக்கு பட்டாசுகள் லாரி மற்றும் பிக்அப் வேன்களில் வந்து இறங்கியது. அப்போது பட்டாசுகளை கடை, குடோன்களில் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடை, குடோனில் இருந்த 13 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களின் உடல்களை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

    இந்த நிலையில் அந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் பட்டாசு கடை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    இறந்த 14 பேரின் உடல்களும் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்தில் கடை உரிமையாளர் நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் பெங்களூரு மடிவாளா செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையிலும், சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால்கபிர் ஆகிய 4 பேரும் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது தொடர்பாக அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி, கட்டிட உரிமையாளர் அணில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதில் நவீன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதால் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்படுதல், விபத்து மரணத்தை ஏற்படுத்துல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாசு கடை, குடோன் உரிமம் தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டிருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
    • 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது.

    கிருஷ்ணகிரி,

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 18ம் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை (நடு சனி) முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலுக்கு கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோயில், வேலம்பட்டி பெரியமலை கோயில், ஐகொந்தம் கொத்தப்பள்ளி சீனிவாசபெருமாள் கோயில், கிருஷ்ணகிரி தம்மண்ணநகர் பெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    புரட்டாசி முன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது. இதே போல மாவட்டம் முழுவதும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து பெருமாள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கனவாய்ப்பட்டி பெருமாள் கோயில் உள்பட பல கோயில்களில் பக்தர்கள் மொட்டை போட்டு தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நபார்டு திட்டத்தில், புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட, ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கட்டுமான பணிகளை பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாக ராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×