search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை சந்தைபடுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
    X

    முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

    வேளாண்மை சந்தைபடுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

    • 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
    • விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    -கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளி கிராமத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங் மற்றும் தேசிய லீன் ஆர்கனைசேஷன் ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி இணைந்து நடத்திய தேசிய வேளாண்மை சந்தைப்ப டுத்தல் பற்றி விவசாயிக ளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    இந்த பயிற்சி முகாமில் கணேஷ் தலைமை வகித்தார், கோலட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா வரவேற்பு ரை ஆற்றினார். இருது கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் கலந்து கொண்டு முகாமை தொ டங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    அறங்காவலர் முனி சங்க ரப்பா, விவசாயிகளுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவம் குறித்து பேசினார். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஆன்லைன் சந்தைப்படுத்தல் குறித்த அனைத்து புள்ளிவி வரங்களையும் பெங்களூரு வில் உள்ள நியூ ஹொரைசன் பொறியியல் கல்லூரியின் பயிற்சியாளரும் பேராசிரி யருமான டாக்டர் ரோஸ் கவிதா விவசாயம் குறித்த பிரதம மந்திரியின் பல்வேறு திட்டங்களைப் குறித்து. மற்றும் டிஜிட்டல் மார்க் கெட்டிங்கிற்கான பல்வேறு பயன்பாடுகளை விளக்க மாக கூறினார் .

    ஆற்றல் திறன் பயிற்சியா ளர் விஸ்வாஸ் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவசாயிகளுக்கு புரிய வைக்கும் ஒரு செயல் விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சிகான ஏற்பாடு களை லீன் அமைப்பின் இயக்குனர் பிரதிபா செய்தி ருந்தார்.

    முகாமில் 3 நாள் பயிற்சி கலந்து கொண்ட விவசாயி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×