என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள எக்கூர் காமாட்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி கவிதா (வயது25). இவர்களுக்கு சுதர்சன் (4), கீர்த்திஸ்ரீ (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கவிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை சத்தியராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
நேற்று கவிதா தனது 2 குழந்தைகளுடன் ஏரி வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சத்தியராஜ் சிங்காரபேட்டை போலீசில் எனது மனைவி மற்றும் குழந்தைகளை சுகுமார் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர்,
ஓசூரில், மாவட்ட சமூகநல மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஆராதனா சமூக சேவை திறன் மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாமினை, நடத்தின.
ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இதில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பி ரண்டு கிருத்திகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தை திருமணம், சைபர்கிரைம், காவலன் செயலி, ஹெல்ப்லைன் குறித்து விரிவாக பேசினார். இதில், மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம்,பேச்சுப்போட்டி வினா விடை,ஆகியவை நடத்தப்பட்டு மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, மாணவியர் அனைவரும் சப்- கலெக்டர் முன்னிலையில், குழந்தை திருமண தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில்,தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்த்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலான ஏழை குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்த்து வருகின்றனர்.
தற்போது நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமுல்படுத்த வேண்டும் என்று அரசு நிர்வாகங்கள் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றுக் கருத்து கிடையாது. நில வகைப்பாட்டில் நீர் நிலை என்று வருவாய்த்துறை கணக்குகளில் இருக்கும். ஆனால் பெரும் பகுதி மக்கள் வீடுகள் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கிறது.
எனவே அரசும், நீதித்துறையும், நீர்நிலைகளுக்கு பாதிப்பு உள்ளதா என்று ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ள, பாதிப்பு இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை வீடுகளை இடிக்காமல் இருக்கவும், ஆய்வுக்குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி வட்டத்தில் நீண்ட காலமாக சாகுபடி செய்யும் நிலங்களுக்கும், குடியிருந்து வரும் வீடுகளுக்கும் பட்டா வழங்கிட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றும், ஓடை புறம்போக்கு என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சக்தி, வட்டக்குழு உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் மனுக்களை வழங்கினர்.
கந்திகுப்பம் அருகே நெல் எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால் துண்டானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த தாண்டவன்பள்ளம் கிராமத்தை சோந்தவர் ராஜேந்திரன் (வயது60). கூலி தொழிலாளி.
இவர் பர்கூர் அருகே உள்ள சின்னகாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (31) என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் பணியாற்ற கடந்த 4-ந் தேதி பிஆர்ஜி.மாதேப்பள்ளி பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது நெற்கதிர்களை எந்திரத்தில் விட, எந்திரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது நிலை தடுமாறி, எந்திரத்தில் ராஜேந்திரன் இடது கால் சிக்கி, முழங்காலுக்கு மேல்வரை நசுங்கி துண்டாது.
இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு, கந்திகுப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் பைக் கவிழ்ந்து மெக்கானிக் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சின்னமேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(23). கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (37). நண்பர்களான இருவரும் டூவீலர் மெக்கானிக்குகள் ஆவர்.
இதில், லோகேஸ்வரன் பைக் ரேசில் பங்கேற்றும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பால சர்வீஸ் ரோட்டிலுள்ள தர்கா அருகே தர்மபுரி தேசியநெடுஞ்சாலைக்கு சென்றபோது தாறுமாறாக ஓடிய பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். லோகேஸ்வரன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் அருகே பள்ளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காரகுப்பம் இருளர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள சின்ன ஏரிக்குட்டை ஏரிக்கு பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி வளைவில் திரும்பும் போது, சின்னஏரிக்குட்டை ஏரி தடுப்புசுவருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது டிரைவர் லாரியில் இருந்து குதித்து தப்பினார்.
தகவலின்படி பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக லாரி கவிழ்ந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை.
குடும்பம் நடத்த மனைவி வராததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனபள்ளி,
கர்நாடக மாநிலம் கேம்மனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது43). தொழிலாளியான இவரது மனைவி பிரமிளா (33). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனவைிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு பிரமிளா தனது ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், சிகராமகனப்பள்ளியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
மனைவியை பிரிந்து இருந்த மஞ்சுநாத் மாமியார் வீடான சிகரமாகனப்பள்ளி கிராமத்திற்கு வந்து தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.
சம்வத்தன்று மஞ்சுநாத்தை மனைவி மற்றும் மாமியார் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் நேற்று மாலை மஞ்சுநாத் வேப்பனப்பள்ளி குப்பம் செல்லும் சாலையோரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பனபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மஞ்சுநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூறைகாற்று வீசியதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிசுற்று வட்டாரங்களில் மாலை வேலைகளில் 6-வது நாளாக இடியுடன் ஆலங்கட்டி காற்று உடன் மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 4 மணி அளவில் சூளகிரி அருகே இம்மிடிநாயக்கன்ப் பள்ளி ஊராட்சியை சேர்ந்த கரகூர் பகுதியில் ஆலங்கட்டி காற்றுடன் மழை பெய்தது. இதனால் முன்னாள் ஒசஅல்லிஊராட்சி மன்ற தலைவர் மாைதயனுக்கு சொந்தமான ரூ.38 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்த பசுமை குடி நாசமானது.
அதே போல அப்பகுதியில் தக்காளி மற்றும் விவசாய பயிர் நாசமானது. தியாகரசனப் பள்ளி பகுதியில் தக்காளி, கோஸ்' பூதினா தோட்டங்கள், பாத்த கோட்டா பகுதியில் தக்காளி, காலிபிளவர், முட்டை கோஸ், மற்றும் பயிர்கள் நாசமானது.
நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த அகரம் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது35) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சேட்டு (60) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக சேட்டு அவரது உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து விமலை தாக்கியுள்ளனர்.
இது குறித்து விமல் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சேட்டு, ஜெயராமன், ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய பஞ்சாயத்து தலைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கதாசம் பஞ்சாயத்தில் தலைவராக முனி ரெட்டி இருந்து வருகிறார். இதில் ஊராட்சி செயலாளராக வஜ்ரவேல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் ஆன தண்ணீர் வசதி, சாக்கடை தூர்வாருதல், தெரு விளக்குகள் அமைத்தல், குறித்து புகார் தெரிவிக்க வரும் கிராம மக்களுக்கு தருந்த பதில் அளிக்காமல் தலைவர் திருப்பி அனுப்பப் விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை ஊராட்சி செயலாளர் வஜ்ரவேல்யிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வச்சிரவேல் தலைவர் முனி ரெட்டியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஊராட்சி பணிகள் சரிவர நடைபெறவில்லை என கூற ப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டையில் இருந்து தளி நோக்கி ஊராட்சி செயலாளர் வஜ்ரவேல் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கக்கதாசம் பஸ் நிறுத்ததில் பஸ் நின்றபோது பஸ்சில் ஏறிய முனி ரெட்டி பொதுமக்கள் முன்னிலையில் எதிர்பாரத விதமாக கைகளை வஜ்ரவேலுவை தாக்கியுள்ளார்.
இதில் முகத்தில் அடிபட்டு மூக்கில் ரத்தம் வந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வஜ்ரவேல் தளி போலீசில் புகார் தெரிவித்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் முன்னிலையில் பஸ்சில் ஊராட்சி செயலாளரை பஞ்சாயத்து தலைவர் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலம் ஊருக்குள் செல்லாத 6 தனியார் பஸ்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
காரிமங்கலம்,
கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அகரம் பிரிவு ரோடு, மொரப்பூர் மேம்பாலம் மீண்டும் சர்வீஸ் ரோடு பஸ் நிலையம், கடைவீதி, ராமசாமி கோவில் வழியாக தருமபுரிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல தருமபுரியில் இருந்து வரும் பஸ்கள் ராமசாமி கோவில், கடைவீதி, பஸ் நிலையம் வழியாக கிருஷ்ணகிரிக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் அகரம் பிரிவு ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு காரிமங்கலம் ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக தருமபுரி நோக்கி செல்வதாக வந்த தொடர் புகாரின் பேரில் கலெக்டர் திவ்யதர்ஷினி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் காரிமங்கலம் பஸ்பாஸ் ரோடு ஆகிய பகுதிகளில திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காரிமங்கலம் ஊருக்குள் செல்லாமல் பஸ்பாஸ் வழியாக சென்ற 6 தனியார் பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஊருக்குள் செல்லாமல் பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சம்மந்தப்பட்ட டிரைவர் கண்டக்டர் லைசென்சு பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
காவேரிப்பட்டணம் ,
காவேரிப்பட்டணம் அடு த்த மலையாண்ட அள்ளி செட்டிமாரம்பட்டியை சே ர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் வேடியம்மாள் (வ யது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
வேடியம்மாளுக்கு கட ந்த மூன்று வருடமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.
இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு ப்போட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடு ம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேடியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது குறித்து காவேரி ப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






