என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சப்- கலெக்டர் தேன்மொழி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சப்- கலெக்டர் தேன்மொழி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ஓசூரில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    ஓசூர், 

    ஓசூரில், மாவட்ட சமூகநல மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஆராதனா சமூக சேவை திறன் மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பான  விழிப்புணர்வு முகாமினை, நடத்தின.

    ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.  

    இதில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பி ரண்டு கிருத்திகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தை திருமணம், சைபர்கிரைம், காவலன் செயலி, ஹெல்ப்லைன் குறித்து விரிவாக பேசினார். இதில், மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம்,பேச்சுப்போட்டி வினா விடை,ஆகியவை நடத்தப்பட்டு மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

     முன்னதாக, மாணவியர் அனைவரும் சப்- கலெக்டர் முன்னிலையில், குழந்தை திருமண தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
    Next Story
    ×