என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தொழிலாளியை தாக்கிய தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பெட்ரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது52). இவரது சகோதரர் சரவணன். 

    இந்த நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கடந்த 6-ந்தேதி அன்று சரவணன் தனது அண்ணன் என்று கூட பார்க்காமல் மாதேசை சரமாரியாக தாக்கியுள்ளார். 

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மாதேசை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    இது குறித்து மாதேஸ் பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சரவணன், முனியம்மாள் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கேழ்வரகு தரம் பிரிக்கும் போது எந்திரத்தில் பெண்ணின் தலை சிக்கியது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ஜி.டி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சியம்மாள் (வயது50). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கேள்விறகு பயிரிட்டுள்ளார். அது தற்போது அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று அறுவடை செய்த கேள்விறகை எந்திரம் மூலம் தரம் பிரிக்கும் பணி நடந்தது. அப்போது எந்திரத்தில் எதிர்பாராவிதமாக அம்சியம்மாள் தலைமுடி சிக்கியது.
    இதனை சுதாரித்து கொண்ட டிரைவர் எந்திரத்தை உடனே நிறுத்தினார். இதில் அவர் தலையின் டாப் பகுதி தனியாக பிரிந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது அலாரம் அடித்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள்- பணம் தப்பியது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நகை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர்.
     இதனால் வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. வங்கியில் அலாரம் மணி  தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்ததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஓடி  வந்து பார்த்தனர். இதனை சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
    அப்போது வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை ஆய்வு செய்தனர். 

    மர்ம நபர்கள் நோட்டமிட்டு திட்டம் போட்டு  நள்ளிரவு இந்த வங்கியில் கொள்ளையடிக்க முயன்று இருப்பது தெரியவந்தது. இதனால் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையர்களின் புகைப்படம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும்இது பற்றி போலீசார் வங்கியின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வங்கி லாக்கரில் உள்ள பணம், நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    குன்னத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போதி பறந்து வந்த இரும்பு தகடு தாக்கியதில் பெண் பலியானார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பச்சை யம்மாள் (வயது 43).

     இந்த நிலையில் நேற்று ஊத்தங்கரை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வீட்டின் வெளியே துவைத்து காயவைத்திருந்த துணிகளை பச்சையம்மாள் சென்றார்.
    அப்போது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டின் மேற்கூரையில் மழைக்கு ஒழுகாமல் இருக்கு ஒரு இரும்பு தகர சீட்டு வைத்திருந்தனர்.

    சூறைக்காற்று பலமாக வீசியதால் இரும்பு தகடு பறந்து பச்சையம்மாள் தலையில் விழுந்தது. இதில் பச்சையம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

     இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை  போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேரில் சென்று பச்சையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே 3 வயது ஆண் மானை வேட்டையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி, 

     கிருஷ்ணகிரி மவாட்டம் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில், வனவர் துரைக்கண்ணு, வன காப்பாளர்கள் முருகன், அங்குரதன், வன காவலர் பூபதி உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பிரிவுக்கு உடபட்ட கணபதிபட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 4 பேர் கையில் பெரிய மூட்டையுடன் வந்தனர். வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்தனர். அந்த மூட்டையில் 3 முதல் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    இதையடுத்து அந்த 4 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மொரப்பூர் அடுத்த கணபதிப்பட்டியை சேர்ந்த ராஜி(65), முருகன்(36), மாதையன்(58), சேலம் அழகாபுரம் அருகே உள்ள நகரமலை அடிவாரத்தைச் சேர்ந்த செல்லப்பன்(34) என்று தெரியவந்தது. 

    மேலும், அவர்கள் கணபதிப்பட்டி பகுதியில் மானை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தலையை தனியாக துண்டித்து விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த போது வனத்துறையினரிடம் பிடிபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். 

    அவர்களிடம் இருந்து கொல்லப்பட்ட மானின் உடல் மற்றும் உரிமம் பெறாத ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
    கிருஷ்ணகிரிக்கு வந்த கர்நாடக மாநில கவர்னருக்கு டிஆர்ஓ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரிக்கு வந்த கர்நாடக மாநில கவர்னருக்கு டிஆர்ஓ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    கர்நாடகா மாநில கவர்னர் தாவார்சந்த் கேலாட், வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கக் கோயிலுக்கு  புறப்பட்டுச் சென்றார். 

    வழியில், தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட் அருகில், ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

    பின்னர் அங்கிருந்து ஏ.எஸ்.பி., அரவிந்த் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி அருகில் உள்ள சுண்டம்பட்டி பர்சவ பத்மாவதி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

    அங்கிருந்து, 9.45 மணிக்கு புறப்பட்ட கவர்னர் வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டார். அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்றடைந்தார்.
    கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு கடத்திய ரூ.4.21 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கர்நாடாகா மாநிலம் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக வெளியூருக்கு குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
    இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்ஐ. சிவசந்தர் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் கூட் ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 505 கிலோ இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 608 ஆகும். 

    அந்த புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி சென்ற திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள மல்லகுண்டா பகுதியை சேர்ந்த தங்கராஜ்(39) என்பவரை கைது செய்தனர். 

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த பூவரசன், மணி, குருவி என்கிற சிங்காரவேலன், அரசு என்கிற அரசகுமார் மற்றும் 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான தங்கராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு குட்காவை கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் கைதான தங்கராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்.
    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநிலம்  ஒ.என். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 35). எலக்ட்ரீசியன்.
    இந்த நிலையில் நேற்று மாலை இவர் வேலை பார்த்த கடையில் மின் வயர்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். 

    அதன்பேரில்  போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஷவர்மா விற்பனை செய்யப்பபடுகிறதா? என்று உணவு அதிகாரிகள் சோதனை நடத்தினனர்.
    கிருஷ்ணகிரி, 

    சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் பலியானார். 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்த முள்ள 20 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 26 ஷவர்மா கடைகள் மூடப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரியில் 5, ஓசூரில் 3, ஊத்தங்கரை ஒரு கடையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஷவர்மா தயாரிக்கும் விதம், பயன்படுத்தப்படும் கோழி, இறச்சி மற்றும் உணவு பொருட்கள் குறிதது கடை பணி யாளர்களிடம் விசாரித்தனர். 

    மேலும் காலாவதியாகாத தரமான பொருட்கள் பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். சோதனையின் போது சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஓசூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேஷ் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். 
    அதன்படி ஓசூர் ரிங்கோடு, பாகலூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள 7க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது 3 ஓட்டல்களில் 6 கிலோ கெட்டுப்போன சிக்கன் இருப்பது தெரிந்தது. இதனால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல் ஓசூர் அருகே பத்தனப்பள்ளியில் 3 ஓட்டல்களில் நடந்த ஆய்வில் ஒரு ஓட்டலில் இருந்த ஒரு கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    தருமபுரி நகர் மற்றும் அதன் அருகே உள்ள இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாஸ்புட் கடைகளில் நேற்று இரவு தருமபுரி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். 

    குளிர்சாதனை பெட்டி யில் வைக்கப்பட்டிருந்த 60 கிலோ சமைத்த பொறித்த இறைச்சியை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் மழையால் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி,  காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    சூளகிரி வட்டார பகுதிகளில் தொடர்ந்து 7 -வது நாளாக மழை பெய்தது. நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள  சூளகிரி- பேரிகை சாலையில் மரம் விழுந்தது.  இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் சூளகிரி பகுதியில் விவசாய பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் குழந்தை பலியானது. தாய் படுகாயம் அடைந்தார்.
    தேன்கனிக்கோட்டை, 

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பெருங்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது30).இவரது மனைவி கோமதி (26). இவர்களுக்கு சிவசக்தி என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை இருந்தது.

    இவர்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பெல்லூர் பகுதிகளில் தங்கியிருந்து திம்மப்பா என்பவரது செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றனர்.நேற்று மதியம் தாயின் பின்னால் ஓடிய குழந்தை அப்பகுதியில் தவறி விழுந்தது. அந்த இடத்தில் ஈரமாக இருந்த எர்த் கம்பி மீது குழந்தை கையை வைத்தது.

     அப்போது குழந்தை மீது மின்சாரம் தாக்கவே அதை கவனித்த கோமதி குழந்தையை காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை சிவசக்தி உயிரிழந்தாள். அவரது தாய் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது42). இவர் நேற்று ஏரியில் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு லோகநாதன் என்பவர் நிலத்தில் வழியாக வந்ததாக தெரிகிறது.

     இதனை லோகநாதன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் அவர் சிவராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
    இது குறித்து சிவராஜ் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.
    ×