என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் ராம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் ஆண்டுதோறும் வெகுவி மர்சையாக நடை பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை.
தற்போது கொரோனா அச்சம் நீங்கியுள்ள நிலையில், இந்தாண்டு மாரியம்மன் கோவில் விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழா நாளான நேற்று அதிகாலை முதலே, பக்தர்கள் குடும்பத்துடன், மாவிளக்கு எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
மேலும். ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கன்னம், முதுகில் அலகு குத்திக்கொண்டும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறும், ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்களின் பூ கரக ஊர்வலமும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பக்தர்கள், ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள தேசம்மா கோவில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகேயுள்ள கங்கம்மா கோவில், மண் மாரியம்மா, ஏடுகிரியம்மா ஆகிய சாமி கோவில்களுக்கும் சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மாரியம்மன் கோவில் விழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் மேற்பார்வையில் நகர் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், புலியூர் ஜம்பு ஏரி ரூ.78 லட்சத்துக்கு மீன் குத்தகை ஏலம் போனது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் மின்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் காவேரிப்பட்டிணம் பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஏலம் நடைபெற்றது.
மீன்வளத்துறை உதவி இநக்குநர் ரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மேட்டுபுலியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ரூ.78,00,100 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். சுமார் 4 ஆண்டுகளுக்கான ஏலத்தொகையை நேற்று காவேரிப்பட்டிணம் பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தினார்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இநக்குநர் ரத்தினம் அவர்களிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்திரவுப்படி ஏலம் விடப்பட்டு, தொகையை காவேரிப்பட்டிணம் பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபின் மீண்டும் நீதிமன்ற உத்திரப்படி அடுத்தகட்ட செயல்பாடுகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மீன் ஏலத்தில் இரு பிரிவினருக்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்ற நிலையில் பர்கூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 45 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பிரச்சனை ஏதுமின்றி சமூகமாக ஏலம் நிறைவு பெற்றதால் அனைவரும் நிம்மதியாக சென்றனர். பிரச்சனைக்குரிய மீன் ஏலம் என்பதால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை பர்கூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் படம் பிடிக்க கூடாது வெளியே செல்லுங்கள் என தெரிவித்தார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சூளகிரி பகுதியில்அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.
இதில் அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் தினேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சரவணன்,ஜெகதாம்பிகா, நடராஜன், சப்தமோகன், கணகவல்லி மற்றும் நிர்வாசிகள் 50 மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கை முன்வைத்து சூளகிரிஅரசு வட்டார மருத்துவமனை, வட்டார கல்வி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் , வட்டார வளர்ச்சி அலுவலகம், முன்பும் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
பெல்லாரம்பள்ளி அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலையரசன்த லைமையில் பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை அருகருகில் உள்ளன. முக்கிய சாலையான இப்பகுதி வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் புறநோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், கால்நடை மருத்துவமனைக்கு செல்வோர் அனைவரும் செல்லும் சூழல் உள்ளது.
இதே பகுதியில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பள்ளி முடிந்து வீடு செல்லும் மாணவர்களிடம் மது பிரியர்கள் குடி போதையில் தகாத வார்த்தைகள் பேசுவதும், மாணவிகளை கிண்டல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளித் தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் ஒப்புதல் கையெழுத்துடன் வழங்கியுள்ள இந்த மனுவை விசாரித்து டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில்கூ றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 872 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி டீன் பேட்டியில் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘இன்னுயிர் காப்போம் நம்மைகாக்கும் 48’ திட்டத்தின் கீழ் இதுவரை, 872 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறினார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ந் தேதி ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு, 48 மணி நேரத்தில் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்று வருகிறது.
கடந்த ஏப்.,20-ந் தேதி கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சென்னப்பன் (வயது 60) என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சென்னப்பனுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உடனடியாக எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன், யூ.எஸ்.ஜி., ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இதில், அவருக்கு வயிற்றுப் பகுதி மேலிழுத்து நுரையீரலோடு கலந்திருந்ததும், மண்ணீரல் கிழிந்து ரத்தக்கசிவும், இடது மார்பு கூட்டில் 5 விலா எலும்புகள் உடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு அடுத்த, 6 மணி நேரத்தில், 3 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மண்ணீரலை அகற்றி, நெஞ்சுப்பகுதிக்குள் இருந்த இரைப்பையை வயிற்றுக்குள் மீண்டும் செலுத்தி, உதரவிதானம் கிழிந்ததும் சரி செய்யப்பட்டுள்ளது.
மார்பு கூட்டில் குழாய் பொருத்தி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன், 5 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 9 யூனிட் ரத்தம் வழங்கியும் அவரை மருத்துவ குழுவினர்கா ப்பாற்றியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சை மேற்கொண்டால், 6 லட்ச ரூபாய் வரை செலவாகி இருக்கும். ஆனால் இன்னுயிர்கா ப்போம் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் சிறப்பு நிபுணர்கள் சுந்தராம்பாள், பத்மநாபன், நந்தபிரபு, சுபா ஆகிய டாக்டர்கள் வழிகாட்டுதல்படி டாக்டர்கள் ராசு, செந்தில்குமார், கோகுல் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 872 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். அதில், 100க்கும்மேற்பட்டோரை கடினமான சிகிச்சைகளுடன் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, உள்ளிருப்பு உதவி மருத்துவ அலுவலர்கள் ராஜலட்சுமி, ராஜா, மது, நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
ஓசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஓசூர்,
ஓசூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஸ்ரீராம ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மமூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட மகளிரணி தலைவி கிரிஜம்மா மற்றும் ஓசூர், சூளகிரி,தளி கெலமங்கலம் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய தாலுக்காக்களை பிரித்து, ஓசூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மானிய பொருட்களை தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சூளகிரி தேன்கனிக்கோட்டை தாலுக்காக்களில் வாழும் மலைத்தோட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பட்டாக்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுக்காக்களில் இதுவரை சூறைக்காற்று, கனமழையால் பசுமைக்குடில்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் கடன் ரத்து செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீராம ரெட்டி பேசினார்.
ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்தது. இதனால்விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கான ம்பட்டி கிராம பகுதியில் விவசாயி செல்வம். இவரது விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் வாழை பயிர் செய்திருந்தார்.
நேற்று வீசிய சூறாவளி காற்றினால் சுமார் 300 -க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை தார்கள் சூறைக்காற்றில் முற்றிலும் உடைந்து சேதமடைந்து போனது.
இதனால் விவசாயிக்கு சுமார் ஒரு லட்சம் நட்டம் ஏற்பட்டதாக வேதனையுடன் கூறுகிறார். இதேபோல இப்பகுதியில் வாழை பயிர்கள் காற்றினால் உடைந்து விழுந்து உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கிட்டு உரிய முறையில் நிவாரணம் வழங்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக விவசாயம் செய்ய ஏதுவாய் இருக்கும் என கூறினார் .
இது போன்ற இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஊத்தங்கரை அருகே நிலத்தகராறு பிரச்சினையில் தொழிலாளிக்கு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்குமார் (வயது28). அதே பகுதியைச சேர்ந்த ஜெயராமன் (37). உறவினர்களான இருவருக்கும் நீண்டகாலமாக விவசாய நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை பிரச்சினை இருந்து வந்துள்ளது.
அப்போது கோவிந்தன் மற்றும் மனைவி லட்சுமி, உறவினர் தேவசேனா மூன்று பேரும் நிலப்பிரச்சினை முன் விரோதத்தை காரணம் காட்டி யுவராஜ் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி கொண்டனர்.
இதில் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்ட யுவராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.6.6 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை மற்றும் ஸ்மார்ட் போர்டு உபகரணங்களை வழங்கியது.
கிருஷ்ணகிரி,
மகளிர் முன்னேற்றத்திலும், சமூக மேம்பாட்டிலும் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனமானது, கல்விப் பணியின் ஒரு பகுதியாக திருப்பூர் செயின்ட்ஜோசப் கல்லூரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 60 ஏழை எளிய மாணவியருக்கு தலா ரூ.7500- என மொத்தம் ரூ.4.5 லட்சம் கல்வி உதவித்தொகையையும், அக்கல்லூரியின் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2.1 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு உபகரணங்களையும் வழங்கி உதவினார்.
கல்லூரியின் முதல்வர் குழந்தை தெரசா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்மார்ட் உபகரணங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ெதாடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, கல்லூரி மாணவர்களிடம், இந்த ஸ்மார்ட் போர்டு உபகரணங்களின் மூலம் கற்றல் திறனை மேன்மேலும் மேம்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயின்று தங்களின் பெற்றோருக்கும் இக்கல்லூரிக்கும் பெருமை சேர்க்குமாறு அறிவுரை வழங்கினார்.
இக் கல்லூரியின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.12.43 லட்சம் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரு ம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்,
போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளர் உள்பட 3 பேர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடையில் மதுவிற்பனை நடந்துள்ளனர்.
இதனால் கூட்டம் சற்று அதிகம் காணப்பட்டது. நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் மஞ்சமேடு அரசு டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்துள்ளனர்.
இந்த சத்தம் அருகில் குடியிருந்தவர்களுக்கு கேட்டது. இதனால் அவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை சுதாரித்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிசென்று விட்டனர்.
பின்னர் பொதுமக்கள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர்.
உடனே அந்த டாஸ்மாக் கடை விற்பனனயாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடையில் உள்ள மதுபானங்கள் எதுவும் திருடு போன என பார்த்து வருகின்றனர்.
நபர்கள் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொது மக்கள் சுதாரித்ததால் டாஸ்மாக் கடையில் பல லட்சம் மதிப்புள்ள மதுபா னங்கள் தப்பியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நாகரசம்பட்டியில் உள்ள குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இதனால் அந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க லாம்என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 தினங்களில் அடு த்தடுத்து கொள்ளையர்கள் 2 இடங்களில் கொ ள்ளையடிக்க முயன்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளத் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என போலீசார் விடுத்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் இதுவரை 44 பாக்கிகளை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டமானது 3 மாநில எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதிகள் அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாகும்.
இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களின் உயிரை சூறையாடுவதும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.
இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் சிலர் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நாட்டு துப்பாக்கிகளை கள்ளத்தனமாக தயாரித்து வனவிலங்குகளை விரட்டுவதற்கு வேட்டையாடுவதற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் மாவட்டத்தில் அனைத்து கள்ளதுப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்பி கிருத்திகா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் மற்றும் சுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அப்போது தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் கள்ள துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைப்பர்க ள்மீது எந்தவித வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
அதனடிப்படையில் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் தண்டோரா மூலம் வரும் மே 10-ந் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் பொது மக்கள் தாமாக முன்வந்து போலீசில் ஒப்படைக்கவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிறகு கள்ளதுப்பாக்கி வைத்திருப்ப வர்கள் ஒரு சிலர் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர்.
இதுவரை தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மட்டும் 33 துப்பாக்கிகளும் மொத்தம் 44 துப்பாக்கிகளின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஊத்தங்கரை அருகே சூறைக்காற்று பலமாக வீசியதால் இரும்பு தகடு தலையில் விழுந்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 43).
இந்த நிலையில் நேற்று ஊத்தங்கரை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வீட்டின் வெளியே துவைத்து காயவைத்திருந்த துணிகளை பச்சையம்மாள் சென்றார்.
அப்போது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டின் மேற்கூரையில் மழைக்கு ஒழுகாமல் இருக்கு ஒரு இரும்பு தகர சீட்டு வைத்திருந்தனர்.
சூறைக்காற்று பலமாக வீசியதால் இரும்பு தகடு பறந்து பச்சையம்மாள் தலையில் விழுந்தது. இதில் பச்சையம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேரில் சென்று பச்சையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 43).
இந்த நிலையில் நேற்று ஊத்தங்கரை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வீட்டின் வெளியே துவைத்து காயவைத்திருந்த துணிகளை பச்சையம்மாள் சென்றார்.
அப்போது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டின் மேற்கூரையில் மழைக்கு ஒழுகாமல் இருக்கு ஒரு இரும்பு தகர சீட்டு வைத்திருந்தனர்.
சூறைக்காற்று பலமாக வீசியதால் இரும்பு தகடு பறந்து பச்சையம்மாள் தலையில் விழுந்தது. இதில் பச்சையம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேரில் சென்று பச்சையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






