என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஊத்தங்கரை அருகே நிலத்தகராறு பிரச்சினையில் தொழிலாளிக்கு கத்தி குத்து

    ஊத்தங்கரை அருகே நிலத்தகராறு பிரச்சினையில் தொழிலாளிக்கு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்குமார் (வயது28). அதே பகுதியைச சேர்ந்த ஜெயராமன் (37).  உறவினர்களான இருவருக்கும் நீண்டகாலமாக விவசாய நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை பிரச்சினை இருந்து வந்துள்ளது.

     அப்போது கோவிந்தன் மற்றும் மனைவி லட்சுமி, உறவினர் தேவசேனா மூன்று பேரும் நிலப்பிரச்சினை முன் விரோதத்தை காரணம் காட்டி யுவராஜ் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி கொண்டனர்.

    இதில் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்ட யுவராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில்  ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×