என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் கடையை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் கடையை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரு ம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர்,

    போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளர் உள்பட 3 பேர் பணியாற்றி வந்தனர்.  

    இந்த நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடையில் மதுவிற்பனை நடந்துள்ளனர்.

     இதனால் கூட்டம் சற்று அதிகம் காணப்பட்டது. நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். 
    இந்த நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் மஞ்சமேடு அரசு டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்துள்ளனர்.

     இந்த சத்தம் அருகில் குடியிருந்தவர்களுக்கு கேட்டது. இதனால் அவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை சுதாரித்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிசென்று விட்டனர்.

    பின்னர் பொதுமக்கள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு  அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
    இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர்.
    உடனே அந்த டாஸ்மாக் கடை விற்பனனயாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடையில் உள்ள மதுபானங்கள் எதுவும் திருடு போன என பார்த்து வருகின்றனர்.

     நபர்கள் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொது மக்கள் சுதாரித்ததால் டாஸ்மாக் கடையில் பல லட்சம் மதிப்புள்ள மதுபா னங்கள் தப்பியுள்ளது. 
     இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  
    நேற்று முன்தினம் நாகரசம்பட்டியில் உள்ள குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 

    இதனால் அந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க லாம்என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கடந்த 2 தினங்களில் அடு த்தடுத்து கொள்ளையர்கள் 2 இடங்களில் கொ ள்ளையடிக்க முயன்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×