என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஒ.என். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 35). எலக்ட்ரீசியன்.
இந்த நிலையில் நேற்று மாலை இவர் வேலை பார்த்த கடையில் மின் வயர்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






