என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறாவளி- மழையால் ஏ.செட்டிப்பள்ளியில் சாலையில் விழுந்த மரம்.
    X
    சூறாவளி- மழையால் ஏ.செட்டிப்பள்ளியில் சாலையில் விழுந்த மரம்.

    சூளகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் மழையால் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி,  காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    சூளகிரி வட்டார பகுதிகளில் தொடர்ந்து 7 -வது நாளாக மழை பெய்தது. நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள  சூளகிரி- பேரிகை சாலையில் மரம் விழுந்தது.  இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் சூளகிரி பகுதியில் விவசாய பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×