என் மலர்
கிருஷ்ணகிரி
- உடல்நலக்குறைவால் உயிரி விட்ட டிரைவர்.
- இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்துள்ள குண்டம்பட்டியை சேர்ந்த வர் தொன்பாஸ்கோ (வயது57). டிரைவரான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது.
இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் மன முடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பேச்சு வார்த்தை ஒத்துவராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ளது பரசனேரி. இங்கு கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் ஏரி முழுவதும் தண்ணீர் நிரப்பி காணப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்து நீர் செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் கால்வாய் முழுவதும் மண்ணை கொட்டி அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இதனால் ஏரியில் இருந்து நீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அண்ணா நகரில் வசிக்கும் மக்கள் வீடுகளில் சுமார் ஆறு அடி வரை தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும் நேற்று அப்பகுதியில் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்த நிலையில் அவரின் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சு வார்த்தை ஒத்துவராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் ஆக்கிர மிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஜே.சி.பி கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ள மண்ணை அகற்றி உபரி நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உபரி நீர் வெளியேற வழி செய்ததால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஊத்தங்கரை- திருப்பத்தூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- எலிபேஸ்டை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
- மருத்துவமனையில் உயிர் பிரிந்த பரிதாபம்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள எம்.பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி பாரதி (வயது27).
இவர் கடந்த 13-ந்தேதி அன்று வீட்டில் எலிபேஸ்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இயற்கை உபாதை கழிக்க காரை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார்.
- மிரட்டி பணம் ரூ.2,000 மற்றும் ரூ.2, 20,000- மதிப்புள்ள காரை எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
ஒசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பைரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ராஜ்குமார் (36). இவர், தனது காரில் மத்திகிரி- கெலமங்கலம் சாலை, ஜொனபண்டா கூட்டு ரோடு, ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, இயற்கை உபாதை கழிக்க காரை நிறுத்திவிட்டு இறங்கினார்.
அப்போது, மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவரை தாக்கி, மிரட்டி பணம் ரூ.2,000 மற்றும் ரூ.2, 20,000- மதிப்புள்ள காரை எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து ராஜ்குமார், மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார்.
- திடீரென பெண்கள் 8 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி, தோப்பூர் பகுதியில் ஓடை புறம்போக்கை ஆக்ரமித்து 11 தார்சு வீடுகள், 12 சிமெண்ட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 25, என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று தோப்பூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சரவணன், பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், காவேரிப்ப ட்டிணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ்அகமது மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்ரமிப்புகளை அகற்றச் சென்றனர்.
அங்கு ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமத்தினுள் பொக்லைன் இயந்திரத்தை அனுமதிக்காமல் சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலமுறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாமல் இருந்து வந்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, பொன்னி, சந்திரமதி, ஜெயலட்சுமி, உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்ணெண்யை ஊற்றி தற்கொலை முயற்சி செய்தனர்.
அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். கிராமத்தின் நுழைவு பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவரின் வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முயன்றபோது, மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆக்ரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 101 பள்ளிகளை சேர்ந்த 945 வாகனங்கள் உள்ளது.
- வாகனங்களில் இருபுற மும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரி மைதானத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:
தொலைபேசி எண்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 101 பள்ளிகளை சேர்ந்த 945 வாகனங்கள் உள்ளது. இதில், முதற்கட்டமாக 278 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக ஏறும் பொழுது படிகட்டுகள் மற்றும் தரைதளம் சரியான அளவு இருக்கிறதா என அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுற மும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள், பணிபுரியும் நடத்துனர்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசர வழி கதவுகள், ஜி.பி.ஆர்.எஸ். கருவி பெருத்தம், தீயணைப்பு கருவிகள் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்கம் ஓட்டு நர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன், துணை போலீஸ்சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கந்துவட்டி விவகாரத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய பா.ஜ.க.ஆட்சியில், தனிமனித பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது, மேலும் நிலைமை மிகவும் மோசமடையும் அபாயம் உள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட மற்றும் ஓசூர் மாநகர சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், தமிழக கவர்னரை, மத்திய அரசு திரும்ப அழைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் காமராஜ் காலனியில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநில பொருளாளர் இல.சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட, மாநகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாநில தலைவர் ஜெகதீஷ் வரவேற்றார். இதில், தலித் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் எம்.பி.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மேலும் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிறுவனர் இளவரசன், ஐ.பி.எப்.மாநில அமைப்பாளர் ராகவராஜ், சி.பி.ஐ.எம்.எல்.மாநிலக் குழு உறுப்பினர் சித்தானந்தம், உள்பட பலர் பேசினர்.. முன்னதாக, செங்கோட்டையன் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டிய மருத்துவத்துறை, இன்று பணம் ஒன்றே என்ற குறிக்கோளுடன் செயல்படுவதாக மாறி யுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கந்துவட்டி விவகாரத்தில், பாதிக்கப்படுபவர்கள் போலீசாரிடம் புகார் கொடுக்க இயலாத நிலையில் தான் அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கந்துவட்டி விவகாரத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது எங்களின் நோக்கம். மத்திய பா.ஜ.க.ஆட்சியில், தனிமனித பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது, மேலும் நிலைமை மிகவும் மோசமடையும் அபாயம் உள்ளது.
இந்தியாவின் பொருளா தாரம் மிகவும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கிறது". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, மாநில இணைசெயலாளர் சகுந்தலா தங்கராஜ், தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, மண்டல செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கன மழையால் அணை நிரம்பியது.
- அணையின் பாதுகாப்பு கருதி 1600 கன அடி நீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவான 19.6 அடியில் 18.5 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கன மழையால் கேஆர்பி அணையின் உபரி நீர் பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு வந்து தண்ணீர் கொண்டிருக்கிறது.
மேலும் ஜவ்வாது மலை, அங்குத்தி சுனையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம், மகனுற்பட்டி, மாரம்பட்டி, பெரியதள்ளபாடி பகுதிகளில் உள்ள ஏரிகளும் நிரம்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடியில் தற்பொழுது 18.5 அடியை எட்டியுள்ளது.
அணைக்கான நீர்வரத்து 1600 கன அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி 1600 கன அடி நீரை அப்படியே வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 2 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே நீர்நிலைகளில் குளிக்கவோ புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் எனவும் கரையோரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- ஓசூர் குடிமை பொருட்கள் வழங்கல் துறை தனி தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளது.
- சூளகிரி தாசில்தார் நீலமேகன், கிருஷ்ணகிரி தாசில்தாராகவும் பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்களை இட மாற்றம் செய்து கலெக்டர்ஜெய சந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன், ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஞ்செட்டி தாசில்தார் முருகேசன் ஓசூர் குடிமை பொருட்கள் வழங்கல் தனி தாசில்தாராகவும், சூளகிரி தாசில்தார் நீலமேகன், கிருஷ்ணகிரி தாசில்தாராகவும் பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பர்கூர், அஞ்செட்டி, ஓசூர்
பர்கூர் தாசில்தார் பிரதாப், போச்சம்பள்ளி தாசில்தாராகவும், ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அஞ்செட்டி தாசில்தாரா கவும், ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தேன்மொழி சூளகிரி தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல ஓசூர் குடிமை பொருட்கள் வழங்கல் துறை தனி தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி வன நிர்ணய அலுவலர் மோகன்தாஸ், கிருஷ்ணகிரி கோட்ட ஆய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிருஷ்ணகிரி வன நிர்ணய அலுவலர் பணியிடத்திற்கு கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பிறப்பித்து உள்ளார்.
- கூகுல் பே மூலமாக 15 ஆயிரம் ரூபாயை அனுப்பினார்.
- 4 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்திகிரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட கல்லா அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவர ஓசூர் வக்கீல் அலுவலகத்தில் கிளர்க்காக உள்ளார். சம்பவத்தன்று இரவு ஓசூர் அருகே சொப்பட்டியில் உள்ள லே அவுட்டில் தனது நண்பரை சந்திக்க காரில் சென்றார்.
அந்த நேரம் அங்கு வந்த 2 பேர் அவரிடம் இருந்து செல்போனை பேசுவதற்காக வாங்கி கொண்டு தப்பியோடினர். அவர்களை வீரமணி விரட்டி சென்ற போது தங்களது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அந்த வாலிபர்கள் வீரமணியை தாக்கினார்கள்.
மேலும் கூகுல் பே மூலமாக 15 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். அவர்களிடம் இருந்து வீரமணி தப்பினார். இதையடுத்து அவரது காரை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றனர். இதில் காயமடைந்த வீரமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார்.
இந்த நிலையில் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது குருபட்டியை சேர்ந்த இம்ரான் (23), முஸ்ரப் (22), ஆனந்த் (22), ஆரிப் (19) என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மத்திகிரி போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகன்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள சாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி சுகன்யா (வயது 33). கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகன்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சுகன்யா தனது கணவர் வீட்டிற்கு வந்தார். அந்த நேரம் அவரது கணவர் ஜனார்த்தனன், நண்பர்கள் கங்கன் (50), முருகேசன் ஆகியோர் சுகன்யாவை தாக்கினார்கள். மேலும் சுகன்யாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுகன்யா கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்க கூட்டம் நடந்தது.
- சங்கத்தின் பெயரை மாற்ற முடிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட நன்கொடையாளர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வீதம் 100 நபர்கள் வழங்கிய ரூ.1 கோடியை வங்கியில் இட்டு வைப்பு மூலம் சேமித்து, மருத்துவமனையில் சுத்தம், சுகாதாரம் பணிகளுக்காக செலவு செய்து வரப்பெற்றுள்ளது. இச்சங்கம் 2009-10-ம் ஆண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் சங்கம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததை புதுப்பித்திடவும், சங்க பெயர் மாற்றம் செய்தல், சங்க நிர்வாகக்குழு நிர்வாகிகள் மாற்றம் செய்தல், சங்க வங்கி பரிவர்த்தனை அதிகாரம் மாற்றுதல், சங்க தணிக்கை அறிக்கை 2009-10 முதல் 2021-22 வரை ஒப்புதல், தணிக்கையாளர் கட்டணம் மற்றும் பணியாளர் தினக்கூலி வழங்கியது அங்கீகரித்தல், சங்க உறுப்பினர்கள் சேர்க்கை, சங்க வளர்ச்சி, செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சங்கம் புதுப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், சங்க பெயர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு சங்கம் என மாற்றம் செய்திடவும், சங்க நிர்வாகிகள் மாற்றம் செய்தல், வங்கி பரிவர்த்தனை அதிகாரம் மாற்றுதல், தணிக்கை அறிக்கைகள் 2009-10 முதல் 2021-22 வரை ஒப்புதல் அளித்தல், செலவினங்கள் ஏற்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி தொடர்ந்து ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மருததுவக்கல்லூரி முதல்வர் டாக்டர்அசோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்கோவிந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு (பொது), ராஜகோபால் (வளர்ச்சி), கனிம வளத்துறை துணை இயக்குனர் வேடியப்பன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்ரீதர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வி, கல்லூரி துணை முதல்வர் டாக்ர்.சாத்விகா, நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள், சங்க நிர்வாகிகளான மகேஷ், கார்மேகம், டாக்டர்.ரங்கராஜன், கார்டுவின், ராஜேந்திரன், குலசேகரன், ஏகாம்பவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






