என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்க பொதுக்குழு கூட்டம்
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்க கூட்டம் நடந்தது.
- சங்கத்தின் பெயரை மாற்ற முடிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட நன்கொடையாளர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வீதம் 100 நபர்கள் வழங்கிய ரூ.1 கோடியை வங்கியில் இட்டு வைப்பு மூலம் சேமித்து, மருத்துவமனையில் சுத்தம், சுகாதாரம் பணிகளுக்காக செலவு செய்து வரப்பெற்றுள்ளது. இச்சங்கம் 2009-10-ம் ஆண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் சங்கம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததை புதுப்பித்திடவும், சங்க பெயர் மாற்றம் செய்தல், சங்க நிர்வாகக்குழு நிர்வாகிகள் மாற்றம் செய்தல், சங்க வங்கி பரிவர்த்தனை அதிகாரம் மாற்றுதல், சங்க தணிக்கை அறிக்கை 2009-10 முதல் 2021-22 வரை ஒப்புதல், தணிக்கையாளர் கட்டணம் மற்றும் பணியாளர் தினக்கூலி வழங்கியது அங்கீகரித்தல், சங்க உறுப்பினர்கள் சேர்க்கை, சங்க வளர்ச்சி, செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சங்கம் புதுப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், சங்க பெயர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு சங்கம் என மாற்றம் செய்திடவும், சங்க நிர்வாகிகள் மாற்றம் செய்தல், வங்கி பரிவர்த்தனை அதிகாரம் மாற்றுதல், தணிக்கை அறிக்கைகள் 2009-10 முதல் 2021-22 வரை ஒப்புதல் அளித்தல், செலவினங்கள் ஏற்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி தொடர்ந்து ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மருததுவக்கல்லூரி முதல்வர் டாக்டர்அசோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்கோவிந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு (பொது), ராஜகோபால் (வளர்ச்சி), கனிம வளத்துறை துணை இயக்குனர் வேடியப்பன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்ரீதர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வி, கல்லூரி துணை முதல்வர் டாக்ர்.சாத்விகா, நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள், சங்க நிர்வாகிகளான மகேஷ், கார்மேகம், டாக்டர்.ரங்கராஜன், கார்டுவின், ராஜேந்திரன், குலசேகரன், ஏகாம்பவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.